இராக் போர்: இந்தியர்கள் பத்திரமாய் வெளியேற்றப்படுவர்
நியூயார்க்:
இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் வளைகுடாவில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் திக் விஜய்சிங் நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தப் போரினால் வளைகுடா முழுவதும் பதற்றம் ஏற்படலாம், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்ப நினைக்கலாம்.அப்படிப்பட்ட நிலையில் விமானங்களைக் கொண்டு உடனடியாக அவர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவர்.
ஈராக்- அமெரிக்க போரினால் இந்தியாவுக்கு மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படும். வளைகுடாவில் வசிக்கும் இந்தியர்கள் நாட்டுக்குமிகப் பெரும் அளவில் அன்னிய செலாவணியைத் தேடித் தருகின்றனர்.
அவர்கள்பாதிக்கப்பட்டால் நாடும் பாதிக்கப்படும். அதே போல எண்ணெய் சப்ளை பாதிக்கப்படுமானால் உலகின் பிற நாடுகளைப் போலஇந்தியாவும் பாதிப்புக்கு உள்ளாகும்.
போர் ஏற்படும் பட்சத்தில் ஏர்-இந்தியா விமானங்களைக் கொண்டு இந்தியர்கள் உடனடியாகவும் பத்திரமாகவும் திரும்ப அழைத்துவரப்படுவர்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க வரும் ஆண்டு ஜனவரி 9 மற்றும்10ம் தேதிகளில் டெல்லியில் மாநாடு நடத்தப்படும். இதில் தங்களது பிரச்சனைகளை வெளிநாட்டு இந்தியர்கள் தெரிவிக்கலாம். அதைக்கலைய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார் திக் விஜய்சிங்.
ஈராக் நோக்கி ஐ.நா. அதிகாரிகள்:
இதற்கிடையே ஈராக்கிடம் அணு குண்டுகள் உள்ளிட்ட அதி பயங்கர ஆயுதங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய ஐக்கிய நாடுகள்சபையின் ஆயுத சோதனை நிபுணர்கள் ஈராக் விரைந்துள்ளனர்.
ஆயுதங்களை சோதனையிட ஈராக் மறுத்தாலோ, தன்னிடம் உள்ள பயங்கர ஆயுதங்களை ஒழித்துக் கட்ட மறுத்தாலே அந் நாட்டின் மீதுதாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.
லிபியாவுடன் ஒப்பந்தம்?:
இதற்கிடையே அமெரிக்கா தன் நாட்டைத் தாக்குமானால் தனது குடும்பம் மற்றும் துணைப் பிரதமர் உள்ளிட்ட முக்கியமான தனது கட்சிஉறுப்பினர்களை லிபியாவுக்கு பத்திரமாக அனுப்பிவிட ஈராக் அதிபர் சதாம் உசேன் திட்டமிட்டுள்ளதாக லண்டன் பத்திரிக்கைதெரிவிக்கிறது.
இதற்காக லிபிய அதிபர் கடாபிக்கு 1,700 கோடி பணத்தைத் தரவும் சதாம் உசேன் முன் வந்துள்ளதாக அந்தப் பத்திரிக்கை கூறியுள்ளது.
ஆனால், தன்னிடம் பயங்கர ஆயுதம் ஏதும் இல்லை என்று கூறும் ஈராக், இந்த லிபிய ஒப்பந்தத்தையும் மறுத்துள்ளது. தனது நாட்டுஎண்ணெய் மீது கண் வைத்துள்ள ஜார்ஜ் புஷ்சும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும் இந்தத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாகசதாம் உசேன் கூறி வருகிறார்.
-->












Click it and Unblock the Notifications