"குண்டக்க மண்டக்க" வண்டி ஓட்டினால் ரூ.1000 பைன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் அபாயகரமான முறையில் வாகனங்களை ஓட்டினால்ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக மேற்கண்ட நகரங்களின் போக்குவரத்துக் காவல் துறையினருக்கு, போக்குவரத்த கூடுதல் டிஜிபிசுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,

அபாயகரமான வேகத்தில் வாகனங்களை செலுத்துவது, இன்சூரன்ஸ் இல்லாத வண்டிகளை ஓட்டுவது போன்றசெயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.

உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டுவது, பதிவு எண் இல்லாத வண்டிகளை ஓட்டுவது, முன்னால்செல்லும் வாகனங்களை இடதுபுறமாக முந்திச் செல்வது, 18 வயதுக்கு குறைவானவர்கள் வண்டி ஓட்டுவது ஆகியகுற்றங்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.

வேகமாக வண்டி ஓட்டினால் ரூ. 300 அபராதம் விதிக்கப்படும். அதி வேகமாக வண்டி ஓட்டினால் ரூ. 400அபராதம் விதிக்கப்படும்.

உடல் தகுதி, மனத் தகுதி இல்லாத நிலையில் வண்டிகளை ஓட்டினால் அவர்களுக்கு ரூ. 200 அபராதம்விதிக்கப்படும்.

இதனை அந்தந்த மாநகர போலீசார் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+