நெல்லை, குமரியில் மழை கொட்டுகிறது: பள்ளிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி:
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலன பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்த கன மழை காரணமாக இந்த இரு மாவட்டங்களில் உள்ள அத்தனை அணைகளும் நிரம்பி விட்டன.
பாபநாசம் அணையில் 102 அடி நீர், சேர்வலார் அணையில் 105 அடி, மணிமுத்தாறு அணையில் 61.25 அடி,கட்னா அணையில் 78 அடி, கிருபா நதி அணையில் 49.71 அடி, குண்டாறு அணையில் 36.10 அடி நீர் உள்ளது.
அதே போல் பேச்சிப்பாறை அணையில் 27.90 அடி, பெருஞ்சானி அணையில் 62.7 அடி, சித்தாறு-1 அணையில்12.3 அடி, சித்தாறு-2 அணையில் 13.12 அடி நீர் உள்ளது.
நாகர்கோவிலில் 8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கொட்டாரத்தில் 7.2 மி.மீ. மழை பெய்துள்ளது. தொடர்ந்து இருமாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
கடுமையான மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக இந்த இரு மாவட்டங்களைச் சேர்ந்த கடலோரப் பகுதிமீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
பள்ளிகளுக்கு விடுறை:
இதற்கிடையே கன மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
கன மழையால் திருநெல்வேலி நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டர்சுனில் பாலிவால் உத்தரவிட்டார்.
மேலும் வெள்ள நிவாரண நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவுபிறப்பித்தார்.
-->
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications