லாரியை விடுவிக்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஏட்டு கைது
சென்னை:
சென்னையில் லாரியை விடுவிப்பதற்காக ரூ.1,500 லஞ்சம் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர்கைது செய்யப்பட்டனர்.
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஆரோக்கியராஜ். அதேகாவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் சம்மனசு நாதன்.
கடந்த 17ம் தேதி ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரி துரைப்பாக்கம் பகுதியில் ஒருவர் மீதுமோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து லாரி டிரைவரையும், லாரியையும் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரஉத்தரவிட்டார் சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்.
இதையடுத்து லாரியையும், டிரைவரையும் மீட்பதற்காக அதன் உரிமையாளர் ராமாராவ் துரைப்பாக்கம் காவல்நிலையத்திற்கு வந்தார். அப்போது ரூ.1,500 பணம் கொடுத்தால் டிரைவரையும், லாரியையும் விடுவிப்பதாகஆரோக்கியராஜ் கூறியுள்ளார். கொடுப்பதாக கூறி விட்டு வந்த ராமாராவ், நேராக லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார்கொடுத்தார்.
இதையடுத்து கூடுதல் டிஜிபி திலவகதி உத்தரவின் பேரில் போலீஸ் தனிப்படை ராமாராவுடன் துரைப்பாக்கம்காவல் நிலையத்திற்கு விரைந்தது. அருகிலேயே ஒரு இடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து கொண்டனர்.
பின்னர் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கொடுத்தனுப்பிய பணத்தை ஆரோக்கியராஜிடம் கொடுத்தார் ராமாராவ்.அதை சந்தோஷமாக வாங்கிய ஆரோக்கியராஜ் அதை ஏட்டு சம்மனசு நாதனிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புபோலீஸார் திடீரென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இருவரும் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டனர்.
செங்கை கிழக்கு மாவட்டத்தில் லஞ்சம் வாங்கக் கூடாது என்று காவல் துறையினருக்கு கடுமையான உத்தரவுபோடப்பட்டுள்ளது. இருந்தாலும் இதுவரை லஞ்சம் வாங்கியதாக 28 காவல் துறையினர் பிடிபட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications