கொழும்புக்கு கப்பலில் சென்று வர ரூ.3,500 கட்டணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே வரும் டிசம்பர் முதல் வாரம் பயணிகள் கப்பல் போக்குவரத்துதொடங்குகிறது. இதற்கான கட்டணம் போய் வர ரூ.3,500 ஆகும்.

இலங்கையில் அமைதி திரும்பிய நிலையில் இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையேஉறவை வலுப்படுத்தும் விதத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க இலங்கை அரசு விருப்பம்தெரிவித்தது.

இதையடுத்து இந்திய அரசும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் விளைவாக கப்பல்போக்குவரத்து தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன. ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டியது மட்டுமேபாக்கி.

இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகப் போவதாகவும் நாளை கப்பல் போக்குவரத்தைத் தொடங்கலாம் என்றும்முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒப்பந்தம் கையெழுத்தாவதுஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்த சில தகவல்கள்:

  • தூத்துக்குடியிலிருந்து கொழும்பு சென்று, வர ஒரு நபருக்கு ரூ. 3,500 கட்டணமாக வசூலிக்கப்படும். இது விமானக் கட்டணத்தை விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
  • மாதத்தில் 15 நாட்களுக்கு இந்தக் கப்பல் இயக்கப்படும். தூத்துக்குடியிலிருந்து இரவு 9 மணிக்குக் கிளம்பி மறுநாள் காலை 6 மணிக்கு கொழும்பு சென்றடையும். மறுமார்க்கத்தில் கொழும்பு நகரில் இரவு 9 மணிக்குக் கிளம்பி, காலை 6 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். பயண நேரம் 9 மணி நேரமாகும்.
  • இதற்கென வழக்கமான விசா தேவையில்லை. ஒரு மாத சுற்றுலா விசாவே போதுமானது. பயணிகள் தலா 50 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி உடன் எடுத்துச் செல்லலாம்.
  • தூத்துக்குடியிலிருந்து கிளம்பி ராமேஸ்வரம், தலைமன்னார் வழியாக இந்தக் கப்பல் கொழும்பு செல்லும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும்.

முன்பு ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. ஆனால் இலங்கையில்தமிழர் படுகொலைகள் காரணமாக 1984ம் ஆண்டு இந்தக் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் இலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் தென் மாநிலங்களுக்கு வருவதற்கான எளிதானபோக்குவரத்து வசதி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதன் மூலம் மறுபடியும்,இலங்கை-தமிழகத்திற்கிடையே சுற்றுலாப் போக்குவரத்து அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+