நாகப்பாவை மீட்க கிருஷ்ணாவுக்கு ஜாதிரீதியில் நெருக்குதல்
பெங்களூர்:
வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப வேண்டும் என பெங்களூரில் நடந்த முக்கியமடாதிபதிகளின் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் ஒவ்வொரு முக்கிய ஜாதிக்கும் தனித்தனியே மடங்கள் உண்டு. கடத்தப்பட்ட நாகப்பா லிங்காயத்து ஜாதியைச்சேர்ந்தவர். இதனால் இவருக்கு ஆதரவாக வீர சைவ மடங்கள் களத்தில் குதித்துள்ளன.
முதல்வர் கிருஷ்ணா ஒக்கலிகா ஜாதியைச் சேர்ந்தவர். இந்த இரு இனத்தினருக்கும் எப்போதும் அரசியல்ரீதியிலும் சமூகரீதியிலும்பிரச்சனை இருந்து கொண்டே இருப்பது வழக்கம்.
நாகப்பா லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் அவரை விடுவிக்க ஒக்கலிகா ஜாதியைச் சேர்ந்த கிருஷ்ணா முழுமனதுடன் முயற்சி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந் நிலையில் நாகப்பாவின் சமூகத்தைச் சேர்ந்த மடங்களின் தலைவர்கள் நேற்று பெங்களூரில் கூடி விவாதித்தனர்.
அதில் வீரப்பன் கோரியபடி நாகப்பாவை மீட்க கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப கர்நாடக அரசு முயற்சி எடுக்க வேண்டும்என கோரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னதாக இந்த மடாதிபதிகளைச் சந்தித்த நாகப்பாவின் மனைவி கண்ணீர் மல்க தனது கணவரை மீட்க உதவுமாறு கோரி மனுஒன்றை அளித்தார்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications