நுரையீரலில் சிக்கிய விசிலை அகற்றி தஞ்சை டாக்டர்கள் சாதனை
திருச்சி:
திருச்சி அருகே செருப்பில் இருந்த பிளாஸ்டிக் விசிலை விழுங்கிய சிறுவனின் நுரையீரலிலிருந்து அந்த விசில்நவீன கருவி மூலம் அகற்றப்பட்டது.
திருச்சி அருகே உள்ள கிராமம் லால்பேட்டை. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அஜீத் குமார் என்ற சிறுவன் தனதுகாலில் அணிந்திருந்த பூட்ஸில் உள்ள சிறிய விசிலை விளையாடிக் கொண்டிருக்கும்போது தனியே எடுத்துவிழுங்கி விட்டான்.
இதையடுத்து அவனுக்குக் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மூச்சு விடவே திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக்கண்டு பதறிய அஜீத்குமாரின் பெற்றோர் அவனை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, சிறுவனின் இடது நுரையீரலில் விசில் சிக்கியிருந்தது தெரிய வந்தது.
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனின் நுரையீரலில் இருந்து விசிலை அகற்ற பிரான்கோஸ்கோப் என்றகருவியை பயன்படுத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை துறையின் தலைவர் டாக்டர் ஜேசுதாஸ் தலைமையில்மருத்துவர் குழு இந்தக் கருவின் மூலம் விசிலை அகற்றும் பணியில் ஈடுபட்டது.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் நுரையீரலில் சிக்கியிருந்த விசில் அகற்றப்பட்டது. அதன் பிறகே சிறுவன்சாதாரண நிலைக்குத் திரும்பினான். இதன் பின்னர் தான் அவனால் நன்றாக மூச்சு விடவும் முடிந்தது.
-->


