சிறகடிக்க ஆசையில் அதிரடி திருப்பம்... விஜயாவுக்காக மீனாவை வெறுக்கும் முத்து.. மனோஜ்க்கு விழுந்து அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றாக நீண்ட நாட்களாக டாப் இடத்தை பிடித்து வந்த சிறகடிக்க ஆசை, தற்போது மீண்டும் அதிரடி திருப்பங்களால் பரபரப்பை கிளப்பி வருகிறது. குறிப்பாக மின் விஜயா சொன்னா வார்த்தையால் முத்துமீனா இருவருக்கும் இடையே சண்டை வருகிறது. அதேபோல இன்றைய எபிசோடில் மீனாவை மையமாக வைத்து பெரிய ட்விஸ்டை கொண்டு வந்திருக்கிறது.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலில் வீடு ஜப்தி செய்யப்பட்டதால் விஜயா தற்போது மீனாவின் அம்மா சந்திரா வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறார். இதுவரை மீனாவை வேலைக்காரி போல நடத்தி வந்த விஜயாவுக்கு இந்த நிலைமை பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. ஆனால் பழைய கசப்புகளை மனதில் வைக்காமல், "வந்த விருந்தினரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும்" என்ற மனநிலையுடன் மீனாவின் அம்மா சந்திரா நடந்து கொள்வது கதைக்கு வேற லெவல் சென்டிமென்ட்டை கொடுத்திருக்கிறது.

கோபத்தில் விஜயா

ஆனால் அமைதியாக போக வேண்டிய விஷயம் அங்கேயே சிக்கல் ஆகிறது. சந்திராவின் பிரண்ட்ஸ் வீட்டுக்கு வந்தபோது, விஜயாவை பற்றி "கொடுமைக்காரி மாமியார்" என்று பேசிக்கொண்டதை விஜயா ஒட்டுக்கேட்டு விடுகிறார். இதனால் அங்கேயே விஜயா கோபப்படுகிறார், "நான் கொடுமைக்காரினு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்களா?" என்று சண்டை போடுகிறார். இந்த சம்பவம் மீனாவுக்கும் முத்துவுக்கும் இடையே பெரிய பிரச்சனையை கிளப்புகிறது.

Siragadikka Aasai serial Vijay TV

முத்துவின் மாற்றம்

எப்போதும் அம்மா பக்கம் நிற்கும் முத்து, சந்திரா பேசியது தெரிந்ததும் கோபத்தில் கொதிக்கிறார். ஆனால் மீனா, "எங்கம்மா அப்படியெல்லாம் நினைச்சு சொல்லியிருக்க மாட்டாங்க" என்று சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். அதற்கு முத்து அடங்காமல் பேச, மீனாவும் இந்த முறை அமைதியாக இருக்கவில்லை. "உங்க வீட்டுல என்னை வேலைக்காரி மாதிரி தான் நடத்துனாங்க" என்று மனக்கசப்பை வெளிப்படையாக சொல்கிறார். இந்த வார்த்தை முத்துவுக்கு அதிர்ச்சியாக மாற, இருவருக்கும் கடும் வாக்குவாதம் வெடிக்கிறது.

இதற்கிடையில் கதையின் அடுத்த வெடிகுண்டு மனோஜ். வீட்டை காப்பாற்ற கடனை அடைக்க உதவி கேட்க முத்து, ரவியுடன் மனோஜை சந்திக்க செல்கிறார். ஆனால் அங்கே மனோஜ் காட்டும் திமிர் எல்லை மீறுகிறது. "அந்த வீட்டுல எனக்கு பங்கு கிடையாது என்று அப்பா சொன்னாரே... அப்போ அந்த வீடு போனா எனக்கு என்ன?" என்று அவர் பேசுவது ரசிகர்களையே கடுப்பேற்றும் வகையில் இருக்கிறது.

மனோஜ் போட்ட கண்டிஷன்

அதுமட்டுமல்ல, "நான் பணம் தரணும்னா அந்த வீட்டுல எனக்கும் பங்கு இருக்குனு எழுதிக்கொடுங்க" என்று கண்டிஷன் போடுகிறார். இதை கேட்ட முத்து கோபத்தில் சட்டையைப் பிடித்து அடிக்க பாய, ரவி தான் தடுத்து நிறுத்துகிறார்.

ஆனால் இந்த எபிசோடின் மிகப்பெரிய ட்விஸ்ட் வேறு. குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் மீனா, தன்னுடைய தம்பி சத்யாவை சந்தித்து பண உதவி கிடைக்குமா என்று கேட்க செல்கிறார். சத்யாவின் முதலாளி நல்லவர் என்று நம்பி அவரிடம் உதவி கேட்க நினைக்கிறார். ஆனால் அங்கேதான் பெரிய ஆபத்து காத்திருக்கிறது.

Siragadikka Aasai serial Vijay TV

சத்யா, அந்த நபரின் மகளை காதலிப்பது ஏற்கனவே அவருக்கு பிடிக்காத விஷயம். இப்போது இந்த சூழலை பயன்படுத்தி மீனாவை சிக்கவைத்து பழிவாங்க அவர் திட்டமிடுகிறார். குடும்பத்தை காப்பாற்ற ஓடிய மீனா, வில்லனின் வலையில் சிக்கப்போகிறாரா என்பதுதான் இப்போது ரசிகர்களின் பதட்டம்.

சமீப வாரங்களில் கொஞ்சம் மந்தமாக சென்ற சிறகடிக்க ஆசை, தற்போது மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் சைகை காட்டுகிறது. குறிப்பாக மீனா - முத்து உறவில் பிரச்சனை, மனோஜின் பேராசை, மீனாவுக்கு வரும் புதிய ஆபத்து என அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் ரசிகர்களை மீண்டும் டிவி முன் உட்கார வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+