அண்ணன் மாதிரின்னு சொன்னியே.. ஏமாற்றிய இன்ஸ்டா காதலி.. போட்டோகிராபரை தீர்த்து கட்டிய காதலன்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருள் புழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆட்சி மாறினாலும் சட்டம் ஒழுங்கு சீராகவில்லை. கோவையில் போட்டோகிராபர் மாயமான வழக்கில், திடீர் திருப்பமாக 2 பேர் அவரை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தன்னுடைய காதலியிடம் பிரவீன் பேசி வந்துள்ளார். "பிரவீன் அண்ணன் மாதிரி" என்று பெண் கூறிய நிலையில், அவர்களின் உரையாடலை பார்த்து அதிர்ச்சியாகி காதலன் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார்.

கோவை மாவட்டம், தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆம் தேதி பிரவீன் மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கிணத்துக்கடவு அருகே ரயில்வே தண்டவாளத்தில் பிரவீனின் சடலம் மீட்கப்பட்டது. போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

man-murder-coimbatore-photographer-over-his-instagram-love-dispute

போட்டோகிராபர் காதல்

ரயில்வே தண்டவாளத்தில் சடலம் மீட்கப்பட்டதால் பிரவீன் தற்கொலை செய்தாரா என்கிற கோணத்தில் தான் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பமாக பிரவீன் கொடூரமாக கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் மனோஜ் ஆகிய இருவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "புகைப்படக் கலைஞரான பிரவீன்குமார் (21) சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண்ணிடம் பேசி வந்தார். அந்த பெண்ணுக்கு கரூரைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவரின் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கடந்த 4 வருடங்களாக அந்த பெண்ணை மனோஜ் காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் மனோஜ் தன் காதலியை சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் செல்போனுக்கு பிரவீன் குமார் அழைத்துள்ளார்.

அண்ணன் மாதிரி

தன் காதலியிடம் பிரவீன் பேசியதால் மனோஜ் சந்தேகமடைந்துள்ளார். 'பிரவீன் எனக்கு அண்ணா மாதிரி' என்று பெண் சமாளித்துள்ளார். ஆனாலும் மனோஜ் நம்பாமல் அவரின் செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அதில் பிரவீன் அந்த பெண்ணை காதலித்தது தெரியவந்தது. இந்த முன்விரோதம் காரணமாக பிரவீனைத் தீர்த்துக்கட்ட மனோஜ் திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னுடைய நண்பன் கார்த்திகேயன் என்பவரை மனோஜ் அழைத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் போட்டோ சூட் ஆர்டர் இருப்பதாக கூறி பிரவீனை அழைத்துள்ளார். அதை நம்பி பிரவீன் சென்றுள்ளார். அவரை காரிலேயே வைத்து இருவரும் படுகொலை செய்துள்ளனர். கடந்த 2ஆம் தேதி இரவு பிரவீனை கொலை செய்துவிட்டு, 3ஆம் தேதி அதிகாலை உடலை கிணத்துக்கடவு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர். கடந்த 4 நாட்களாக வெளியில் சுற்றி வந்தநிலையில், இருவருக்கும் பயம் ஏற்பட்டதால் அவர்களாக சரணடைந்துவிட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+