திருப்பூர், சேலம், ஈரோட்டில் மீண்டும் முளைக்குதா 1 ரூபாய் லாட்டரி? உளவுத்துறை எச்சரிக்கை! உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை மீண்டும் வரக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக கட்சியின் வரவு மற்றும் அதன் பின்னணியில் உள்ள செயல்பாடுகள் குறித்த ஊகங்கள், மாநிலத்தின் எதிர்கால கொள்கை மாற்றங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பேட்டி ஒன்றில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

2003-ல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை, தவெக ஆட்சியின் கீழ் மீண்டும் தொடங்கப்படலாம் என்ற பேச்சு சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது.. அதிலும் திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், அதிகமாக பேசியது இந்த லாட்டரி விவகாரத்தைதான்.

1 rupee lottery tiruppur news salem news erode news tamil nadu lottery illegal gambling intelligence alert tamil news update lottery news india 1

உதயநிதி ஸ்டாலின் சாடல்

உதயநிதி ஸ்டாலின் ஒருமுறை திருச்சியில் பிரச்சாரம் செய்தபோது, "தமிழகத்தில் மீண்டும் லாட்டரி தொழிலை கொண்டு வந்து, மக்களை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், லால்குடி தொகுதியில், அதிமுக சார்பில் லீமா ரோஸ் களமிறங்கி உள்ளார். அவர் குடும்பத்தில், ஒவ்வொருவரும், ஒவ்வொரு கட்சியில் இருக்கின்றனர்.

பெரும் பணக்காரரான லீமா ரோஸ், லால்குடி மக்களை பணத்தால் வெற்றி பெறலாம் என தப்புக்கணக்குப் போடுகிறார். தமிழகத்தில், நேரடியாக பாஜ வர முடியாது என்பதால், அதிமுக என்ற போர்வையை போர்த்திக்கொண்டு வரப்பார்க்கிறது. இதைச் சொன்னால், இபிஎஸ்க்கு கோபம் வருகிறது" என்று கூறியிருந்தார்.

ஆர்எஸ் பாரதி வேதனை

இப்போது தவெக அரியணை ஏறியுள்ள நிலையில், மீண்டும் லாட்டரி பேச்சு இணையத்தில் அடிபடுகிறது.. தமிழ்நாட்டின் வருவாய் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்த விவகாரம் முக்கிய அரசியல் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

2 நாட்களுக்கு முன்பு திமுக மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதியும் இதுகுறித்து கூறியிருந்தார்.. "அண்ணா, பெரியார், ராஜாஜி, கலைஞர், காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் அரசியல் நடத்திய இந்த பூமியில், ஒரு லாட்டரி சீட்டு கும்பலிடம் அரசியல் போய்விட்டதே" என்று வேதனையாக உள்ளது என்று கூறியிருந்தார்.

ஒரு நம்பர் லாட்டரி

இப்படிப்பட்ட சூழலில் ஒரு சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில் அவர் பேசும்போது, "காவல்துறைக்கு வந்த ரிப்போர்ட்டின்படி, திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அங்கு நிறைய வாக்காளர்கள் தவெகவுக்குதான் ஓட்டு போட்டார்கள். இப்போது இங்கு ஒரு நம்பர் லாட்டரி வந்துவிட்டது.

அதேபோல ஈரோடு மாவட்டத்திலும் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம்.. கஷ்டப்பட்டு உழைக்கும் மக்கள் பலர் உள்ளனர். வறுமை காரணமாக . கிட்னி விவகாரத்தில் அதிகம் பலிகடா ஆனது இந்த தொழிலாளர்கள்தான்.. இப்போது ஈரோட்டிலும் ஒரு நம்பர் லாட்டரி வந்துவிட்டது. சேலத்திலும் உழைப்பாளர்கள் அதிகம். எடப்பாடியின் மாவட்டமும் கூட. அங்கேயும் 1 நம்பர் லாட்டரி வந்துவிட்டது.

மீண்டும் தமிழகத்தில் சுரண்டல் லாட்டரி

அன்று திமுக ஆட்சியில் 1 நம்பர் லாட்டரி தடை செய்யப்பட்டது.. லாட்டரி விற்றவர்கள் மீது கேஸ் போடப்பட்டது.. ஜெயலலிதா ஆட்சியிலும் லாட்டரி தடை செய்யப்பட்டது. ஆனால் இப்போது திருப்பூர், சேலம், ஈரோடு என 3 மாவட்டத்திலும் லாட்டரி இறங்கிவிட்டது.. இனிமேல் தமிழ்நாடு முழுக்க லாட்டரி வந்துவிடும். அதிகாரப்பூர்வமான கொள்கை முடிவு போலவெல்லாம் இதனை அறிவிக்க மாட்டார்கள்,.. காதுக்கு காது, கண்ணுக்கு கண் என்று தமிழகம் முழுவதும் இறங்கிவிடும் என்று ஆங்காங்கே இருக்கக்கூடிய காவல்துறை, உளவுத்துறை தரப்பில் சொல்லப்படுகிறது

ஆனால் லாட்டரி மட்டும் வந்துவிட்டால் குடும்பங்கள் அழியும்.. அது போதை போல கவ்விவிடும்... சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர் என மாநிலங்களில் அச்சடிக்கக்கூடிய லாட்டரியை, இங்குள்ள சேலம், ஈரோடு திருப்பூரிலுள்ளவர்கள் சுரண்டுவார்கள்.. இந்த சுரண்டல் 1 நம்பர் லாட்டரி லாட்டரிகள் மேற்கண்ட மாவட்டத்தில் அறிமுகமாகியுள்ளதாக சொல்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+