திமுக அடைந்த தோல்வி.. ரகசிய அறிக்கை கேட்கும் உதயநிதி ஸ்டாலின்.. பின்னணியில் 4 காரணங்கள்!
சென்னை: திமுக அடைந்த தோல்வி குறித்து முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கி இருக்கிறார். இதற்காக தேர்தல் ஆலோசகர் யோகேந்திர யாதவ் குழுவை உதயநிதி ஸ்டாலின் அணுகி இருக்கிறார். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலில் திமுக எதிர்பாராத வகையில் அடைந்துள்ள தோல்வி, அந்தக் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் திமுக நிர்வாகிகள் மத்தியில் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு குழுவை அமைத்து அறிக்கையை கேட்டிருக்கிறார்.

அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது குழு மூலமாக ஆராய்ந்து வருகிறார். திமுகவின் தோல்விக்கு சோசியல் மீடியா ஒரு காரணமாக இருந்தாலும், திமுகவின் பாரம்பரிய வாக்குகளும் பல்வேறு தொகுதிகளில் அடி வாங்கி இருக்கிறது. திமுக குடும்ப உறுப்பினர்கள் கூட திமுகவுக்கு வாக்களிக்கவில்லை. இதனால் திமுக உட்கட்சி பூசலும் தோல்விக்கு காரணம் என்று உதயநிதிக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் திமுகவில் உள்ள சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர கட்சித் தலைமை தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்காக உதயநிதி ஸ்டாலின், தேர்தல் ஆலோசகர் யோகேந்திர யாதவை அணுகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரூட் நிறுவனம் மூலமாக தவெக இன்ஸ்டாகிராமில் நடத்திய பிரச்சாரம் கடைசி 10 நாட்களில் மிகப்பெரிய சேதாரத்தை திமுகவுக்கு உருவாக்கி இருக்கிறது.
ஒரு நிறுவனம் மூலமாக எப்படி தமிழ்நாடு முழுவதும் இப்படியொரு பிரச்சாரம் செய்யப்பட்டது என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை கேட்டுள்ளதாக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் அறிக்கை கேட்பதன் பின்னணி சில காரணங்கள் இருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். லோக்சபா தேர்தலோடு ஒப்பிடும்போது, எந்த வார்டுகள், கிராமங்களில் திமுக வாக்குகள் சரிந்துள்ளன என்பதை அறிய ஆர்வமாக உள்ளார்.
இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகள் எந்த அளவிற்கு தவெக மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு மாறியுள்ளது, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் களப்பணிகளில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு இடையே இருந்த முரண்பாடுகள் என்ன?, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் மத்தியில் இருந்த முக்கிய அதிருப்திகள் மற்றும் கோபங்கள் என்ன? என்று அடிப்படையில் அறிக்கையை சமர்ப்பிக்க கேட்டுள்ளார்.
இதனை மாவட்ட வாரியாக பயணித்து உதயநிதி ஸ்டாலினிடம் அவரின் குழு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகிய மூன்று தரப்புமே இணைந்து மறுசீரமைப்பு செய்ய தீவிரமாக உள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் கட்சி நிர்வாகிகள் யார் யார் விலகுகிறார்களோ, அதனை பொறுப்பு முடிவுகள் எடுத்து கொள்ளலாம் என்ற முடிவில் திமுக தலைமை இருக்கிறது.
-
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications