தவெக ஆட்சியை கலைக்க சட்டத்தில் இடம் இருக்கு! ஆளுநரை சந்தித்த பிறகு அதிமுக எம்பி இன்பதுரை பரபர பேட்டி
சென்னை: தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உடனே நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் தமிழக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இன்பதுரை, கொறடா உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரகசிய காப்பு உறுதி மொழியை மீறி அதிகாரத்தில் இல்லாத நபர்கள் அரசின் உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மேலும், குதிரை பேரம் நடத்த மாட்டோம் என ஆளுநர் முன்பு கூறினார், ஆனால் இப்போது என்ன நடக்கிறது? குதிரை பேரம் மிகவும் ஆபத்தானது, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றார். அதிமுக கொறாடா அக்னி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், குதிரை பேரம் மூலமாக அதிமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர் என்றும், ஆளுநரின் அதிகாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம் என்று விளக்கம் அளித்தார்.

முதல்வரே நேரடியாக சென்றார்
சென்னையில் ஆளுநர் சந்தித்து புகார் அளித்த பிறகு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ண மூர்த்தி மற்றும் எம்பி இன்பதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது இன்பதுரை கூறியதாவது:- தேர்தல் முடிந்த உடனே கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க அதிக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை கொண்ட கட்சி என்ற அடிப்படையில் தவெகவை அழைத்தார். அப்போது ஆளுநர் திரும்ப திரும்ப சொன்னது என்னவென்றால், போதிய எண்ணிக்கை உங்களுக்கு இல்லை.
இதில் குதிரை பேரத்தை அனுமதிக்க மாட்டேன் என்று தானே சொன்னார். அதனால்தான் கவர்னரை சந்தித்துவிட்டு திரும்ப திரும்ப சென்றனர். குதிரை பேரத்தை நடத்த விடமாட்டேன் என்று சொன்ன கவர்னர் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார். குதிரை பேரம் தமிழ்நாட்டில் நடக்கிறதா? இல்லையா? தவெக ஆட்சி அமைக்கும் போது ஆதரவு கடிதம் ஒன்று கொடுத்தனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் இருந்த இடத்திற்கு முதல்வரே நேரடியாக சென்றார்.
வாக்குறுதி கொடுத்தார்
அவர் சில வாக்குறுதிகளை கொடுத்ததாக தெரியவருகிறது. அவர் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எங்கள் கொறடா உத்தரவை மீறி 25 பேர் வாக்க்ளித்தனர். அவர்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்து இருந்தோம். அந்த மனு நிலுவையில் இருக்கும் போதே 4 பேர் ராஜினாமா செய்கிறார்கள். அதே வேகத்தில் தவெகவில் இணைகிறார்கள். இதனால், அது குதிரை பேரம். மீதி 21 பேர் தவறு செய்துவிட்டோம் என்று மன்னிப்பு கடிதம் கொடுத்தனர்.
அவ்வாறு மன்னிப்பு பெற்ற இருவர் மீண்டும் கட்சி தாவினால் அதனுடைய நோக்கம் என்ன. கட்சி தாவல் தடை சட்டம் என்று 10 வது அட்டவணையில் உள்ளது. இதை யார் காப்பாற்ற வேண்டும். ஆளுநர்தான் காப்பாற்ற வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக குதிரை பேரம் நடத்த விடமாட்டேன் என்று கூறிய கவர்னர் இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கவர்னரை கேட்கத்தான் வந்தோம்.
கவர்னருக்கு அதிகாரம் உள்ளது
எனக்கு எண்ண அதிகாரம் இருக்கிறது என்று கவர்னர் கேட்டார். கவர்னருக்கு 167 விதிப்படி அதிகாரம் உள்ளது. குதிரை பேரம் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை. சிபிஐஎம் தலைவரே சொல்லியிருக்கிறார். வைகோ சொல்லியிருக்கிறார். இதற்கு பேர்தான் குதிரை பேரம். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தவெக எம்.எல்.வே புகார் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறது.
அப்போது அரசியல் அமைப்பு தலைவராக இருக்க கூடிய கவர்னர் அதை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம். இரண்டாவது, ரகசிய காப்பு பிரமாணம் என ஒன்று, அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனை மீறி கேபினட் மீட்டிங்கில் இரண்டு பேர் கலந்து கொண்டதாக ஒரு புகார் உள்ளது. அந்த இரண்டு பேர் விஷயத்தை கண்டும் காணாமல் கவர்னர் இருக்க முடியாது. அதையும் விசாரிக்க வேண்டும்.
அந்த சிசிடிவி காட்சிகளை வாங்கி பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் ஆவணத்தை கொண்டு வாருங்கள் என்று கட்சி தாவல் நடைபெற்றதா? என்று அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்கலாம். விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால் 356 கீழ் அவர் ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப முடியும். என்று கூறினார்.















Click it and Unblock the Notifications