நெடுஞ்சாலையில் விபத்தா? 1033 எண்ணை அழையுங்கள்.. ஆம்புலன்ஸ் விரைந்து வரும்
சென்னை:
தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. விபத்தில் காயமடைந்தவர்களுக்குஅருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை தரவே பல நூறு கி.மீ. தூரம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் வழியிலேயேஅவர்கள் உயிரிழக்கும் சோகமான நிலைமை உள்ளது.இதைத் தவிர்க்க நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே அவசர முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. முதல் கட்டமாக 13 முதலுதவி சிகிச்சை மையங்கள் நேற்று இயக்கி வைக்கப்பட்டன.
பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர் தலைமையில் ஆம்புலன்ஸ், பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்கள் ஆகியவை இந்த மையங்களில்எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.
ரூ. 78 லட்சம் செலவில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளின் உதவியுடன் இந்த முதலுதவிமையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரில் அப்பல்லோ மருத்துவமனை இந்த முதலுதவி மையத்தைஅமைத்துள்ளது.
மாமண்டூரில் மியாட் மருத்துவமனையும் இந்த மையத்தை அமைத்துள்ளது. இதே போல சாரம், விழுப்புரம், இளஞ்சியம்,பெரம்பலூர், காவேரிப்பாக்கம், திருவல்லம், ரத்தினகிரி, பள்ளிகொண்டா, புதுக்கோவில், கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய ஊர்களைஒட்டிய நெடுஞ்சாலைகளில் அவரச முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும். 1033 என்ற தொலைபேசி எண்ணில் இந்த மையங்களை கட்டணமில்லாமல்தொடர்பு கொள்ள முடியும்.
விபத்தைப் பார்த்த பொது மக்கள் அல்லது விபத்தில் சிக்கியவர்கள் 1033 என்ற எண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டுவிவரத்தைக் கூறினால் அருகில் உள்ள முதலுதவி மையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் அங்கு வந்து சேரும்.
அப்பல்லோ, மியாட் மருத்துவமனை, சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன், கோவை மருத்துவ மையம், சேலம் கோகுலம்மருத்துவமனை ஆகியவற்றின் உதவியுடன் இந்த மையங்கள் செயல்படும்.
இப்போது அமைக்கப்பட்டுள்ள 13 மருத்துவ மையங்களில் 8 முதலுதவி மையங்களின் செலவை தமிவக அரசும், மீதம் உள்ள 5முதலுதவி மையங்களை அந்தந்த மருத்துவமனைகளும் ஏற்றுக் கொள்ள உள்ளன.
அப்பல்லோ மற்றும் மியாட் மருத்துவமனைகளின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள 2 முதலுதவி மையங்களை நேற்று முதல்வர்ஜெயலலிதா இயக்கி வைத்து ஆம்புலன்ஸ்களின் சாவிகளை வழங்கினார்.
-->
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications