காஷ்மீர்: ராணுவ முகாமில் தாக்குதல்- 6 வீரர்கள் பலி
ஸ்ரீநகர்:
ஸ்ரீநகரில் உள்ள ஒரு ரிசர்வ் போலீசாரின் முகாமை இன்று காலை தீவிரவாதிகளின் தற்கொலைப் படையினர்கடுமையாகத் தாக்கியதில் 6 போலீசார் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் 9 வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.
அதிகாலை 5.45 மணிக்கு ரீகல் சவுக் பகுதியில் உள்ள பாம்போஷ் ஓட்டலில் செயல்பட்டு வந்த ரிசர்வ்போலீசாரின் முகாமை சில பயங்கரவாதிகள் திடீரென்று தாக்கினர்.
இந்த முகாமுக்குள் புகுந்த வேகத்தில் அவர்கள் போலீசாரை நோக்கி சராமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.
இதையடுத்து போலீசாரும் சுதாரித்துக் கொண்டு பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் ஆறு ரிசர்வ்போலீசாரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டனர். மேலும் ஒன்பது போலீசார் படுகாயமடைந்தனர்.
போலீசார் நடத்திய பதிலடித் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வெளியிலிருந்துதுப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே தப்பி விட்டான்.
அப்பகுதி முழுவதையும் சீலிட்ட போலீசார் தப்பியோடிய மூன்றாவது பயங்கரவாதியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவிதமான பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால்ஜெய்ஷ்-ஏ-முகம்மது அல்லது லஷ்கர்-ஏ-தொய்பா ஆகிய அமைப்புகளில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர்கள் தான்இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது.
காஷ்மீரில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மக்கள் குடியரசுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணியின் முதல் சட்டசபைக்கூட்டம் நேற்று தான் தொடங்கிய நிலையில், பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications