கொளத்தூர் மணியை அனுப்பாவிட்டால் நாகப்பாவை கொல்வேன்: வீரப்பன் மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கடத்தப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பாவின் வீட்டுக்கு வீரப்பன் 5வது கேசட் அனுப்பியுள்ளான்.

இன்னும் 12 நாட்களுக்குள் பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர் மணியைத் தூதராகஅனுப்பாவிட்டால் நாகப்பாவைக் கொன்றுவிடப் போவதாக அந்தக் கேசட்டில் வீரப்பன் மிரட்டியுள்ளான்.இதையடுத்து நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டியுள்ளது.

அந்த கேசட்டில் மேலும் அவன் கூறியிருப்பதாவது: காட்டுப் பகுதிகளில் அதிரடிப்படையினர் என்னைத் தேடும்பணியை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

காஷ்மீரில் பயங்கரத் தீவிரவாதிகளையே விடுதலை செய்து கொண்டிருக்கும் போது, கொளத்தூர் மணியைவிடுதலை செய்வதில் கர்நாடக அரசுக்கு என்ன தயக்கம் உள்ளது?

என் விஷயத்தில் கர்நாடக அரசும் தமிழக அரசும் சேர்ந்து விளையாடி வருகின்றன. இதை பொறுக்க முடியாது. 12நாட்களுக்குள் மணியை காட்டுக்குள் அனுப்பாவிட்டால் நாகப்பாவின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியும்.

இவ்வாறு வீரப்பன் மிரட்டியுள்ளான்.

வீரப்பனின் இந்த மிரட்டலால் கர்நாடக அரசு கதிகலங்கியுள்ளது. இது குறித்து விவாதிக்க மூத்த அமைச்சர்களுடன்கிருஷ்ணா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பது எனமுடிவு செய்யப்பட்டது.

நாகப்பா கடத்தப்பட்டு இன்றுடன் 90 நாட்கள் ஆகும் நிலையில், அவரை வீரப்பனிடம் இருந்து விடுவிக்ககர்நாடகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

கொளத்தூர் மணி:

தனது முதல் 4 கேசட்டுகளிலும் கொளத்தூர் மணியையும் கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்பொன்னாச்சி மகாதேவசாமியையும் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்று அந்த கேசட்டுகளில் வீரப்பன்கூறியிருந்தான்.

ஆனால் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணியைத் தூதராக அனுப்புவதில் சட்டச் சிக்கல்உள்ளதாக கர்நாடக அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் வீரப்பனிடமிருந்து நேற்று 5வது கேசட் வந்துள்ளது. கொள்ளேகால் தாலுகா பஞ்சாயத்துஉறுப்பினரான நாகேந்திராவுக்கு அந்த கேசட் வந்து சேர்ந்தது.

அந்த கேசட்டை நாகேந்திரா காமகெரேவில் உள்ள நாகப்பாவின் வீட்டில் கொடுத்தார். அந்த கேசட்டை போட்டுக்கேட்ட நாகப்பாவின் மகன் பிரீத்தம் மற்றும் மருமகன் கிரண் படேல் ஆகியோர் உடனடியாக அதை எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்து முதல்வர் கிருஷ்ணாவிடம் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணா, கர்நாடக டி.ஜி.பி. மடியால், உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அந்த கேசட்டைப்போட்டுக் கேட்டனர்.

இதையடுத்து மூத்த அமைச்சர்களுடன் கிருஷ்ணா நீண்ட விவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது நாகப்பாவின் மனைவியும் குடும்பத்தினரும் கிருஷ்ணாவின் இல்லத்துக்கு வந்தனர். அவர்களைச்சந்தித்த கிருஷ்ணா அனைத்து முயற்சிகளையும் செய்து வீரப்பனிடமிருந்து எப்படியாவது நாகப்பாவைவிடுவிப்பதாக உறுதியளித்தார்.

வீரப்பனுக்கு போன ரூ. 20 கோடி:

இதற்கிடையே வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை விடுவிக்க அவனுக்கு ரூ. 20 கோடி தரப்பட்டதாகஅப்போதையே கர்நாடக டி.ஜி.பி. தினகர் கூறியுள்ளார். அவர் எழுதியுள்ள புத்தகத்தில் இத் தகவல்கூறப்பட்டுள்ளது. ராஜ்குமார் கடத்தலின்போது டி.ஜி.பியாக இருந்தவர் தினகர் என்பதால் இந்தத் தகவல் நூற்றுக்குநூறு உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

Veerappans Prize Catch: Rajkumar என்ற அந்தப் புத்தகம் வரும் 25ம் தேதி டெல்லியில் வெளியிடப்பட உள்ளது. 4பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அந்த ரூ. 20 கோடியும் வழங்கப்பட்டதாக தினகர் கூறியுள்ளார்.

ஆனால், பணம் ஏதும் தரப்படவில்லை என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா அப்போது மறுத்தது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+