தருமபுரி அருகே காட்டில் துப்பாக்கி சண்டை: தீவிரவாதி சுட்டுக் கொலை- 23 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தருமபுரி:

தருமபுரி அருகே காட்டுக்குள் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகளின் தலைவன் ஒருவனைப் போலீசார்சுட்டுக் கொன்றனர். மேலும் 4 பெண்கள் உள்ளிட்ட 23 தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சின்னகனகம்பட்டி-நொச்சிப்பட்டி காட்டுப் பகுதியில் மக்கள் போர்க்குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல்கிடைத்தது.

இதையடுத்து நேற்று மாலை அந்தப் பகுதியைப் போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரைப் பார்த்ததும்அங்கிருந்த தீவிரவாதிகள் காட்டுக்குள் புகுந்து ஓட ஆரம்பித்தனர்.

ஆனால் போலீசார் அவர்களை விடாமல் துரத்தவே, போலீசாரை நோக்கித் தீவிரவாதிகள் திடீரென்றுகண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். வெடிகுண்டுகளையும் வீசி எறிந்தனர்.

தீவிரவாதிகள் சுட்டதில் இன்ஸ்பெக்டர் ஏகநாதனின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து போலீசாரும் பதிலடித்தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

போலீசார் சுட்டதில் பார்த்திபன் என்ற சிவா (25) என்ற தீவிரவாதி குண்டடி பட்டு உயிரிழந்தான். இவன் தான்அந்தத் தீவிரவாதக் கும்பலின் தலைவன் என்று தெரிய வந்துள்ளது. மற்றவர்கள் தப்பியோடினர். காயமடைந்தஇன்ஸ்பெக்டர் உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே தீவிரவாதிகள் முற்றுகையிடப்பட்டுள்ள சம்பவத்தை அறிந்ததும், சேலம் டி.ஐ.ஜி. தமிழ்ச் செல்வன்தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அந்தக் காட்டுக்குள் சென்று தீவிரவாதிகளைத் தேடும்வேட்டையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீண்டும் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

சிறிது நேரம் கழித்து துப்பாக்கிச் சண்டை நின்றவுடன், அப்பகுதி முழுவதிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைநடத்தினர். அருகிலிருந்து கிராமங்களிலும் தீவிரவாதிகளைத் தேடினர்.

இதில் கணக்கம்பட்டி, கொட்டாய், கல்லூர், தண்ணீர் பந்தல்காடு, அனுமந்தீர்த்தம் ஆகிய பகுதிகளில்பதுங்கியிருந்த 4 பெண்கள் உள்ளிட்ட 22 தீவிரவாதிகளைப் போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

ஆந்திராவின் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்று தருமபுரியில் அந்தத் தீவிரவாதஇயக்கத்துக்கான தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தான் இவர்கள் அனைவரும் பிடிபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையிலும் ஊத்தங்கரை அருகே உள்ள மாந்தோப்பில் ஒளிந்து கொண்டிருந்ததீவிரவாதிகளுக்கும் அவர்களைத் தேடிச் சென்ற போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டைநடைபெற்றது.

சிறிது நேரம் கழித்து துப்பாக்கிச் சண்டை நின்றதும், அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஒரு தீவிரவாதியை மட்டும்போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

தப்பியோடிய ஒரு பெண் உள்ளிட்ட ஆறு தீவிரவாதிகளைப் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+