மதுரை மளிகை கடையில் பயங்கர தீ: ரூ.10 லட்சம் நாசம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் பகுதியில் மளிகைக் கடையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ரூ.10 லட்சம்மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
அலங்காநல்லூர் கேட்கடை பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் சண்முகநாதன்.
இவரது மளிகைக் கடையில் நேற்றிரவு திடீரென்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் கடை முழுவதும் தீப்பற்றிஎரிந்தது. மேலும் பக்கத்தில் இருந்த சில கடைகளும் தீயில் கருகின.
இவ்விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகியதாகக் கூறப்படுகிறது.
அலங்காநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications