மேலும் ஒரு பெண் நக்சலைட் உள்பட 2 பேர் கைது
தருமபுரி:
தருமபுரி அருகே காட்டுக்குள் தேடுதல் வேட்டை நடத்தி வரும் போலீசார் இன்று காலை ஒரு பெண்நக்சலைட்டையும் ஒரு ஆண் நத்சலைட்டையும் கைது செய்தனர்.
கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரவாதிகளைத் தேடி சேலம் டி.ஐ.ஜி. தமிழ்ச் செல்வன், எஸ்.பி. பெரியய்யா, மற்றும்6 டி.எஸ்.பிக்கள் தலைமையிலான நூற்றுக்கணக்கான போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சென்ராயன் மலை, போச்சம்பட்டி, குச்சம்பட்டி உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இந்தத் தீவிரசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்ராயன் மலையில் இன்று நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் விஜயா என்ற பெண் நக்சலைட்டும், முனுசாமிஎன்ற நக்சலைட்டும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ. 60,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்இவர்களிடமிருந்தும் ஏராளமான துப்பாக்கிகள், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவைகைப்பற்றப்பட்டன.
இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 25 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் பெண்கள்என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் சுட்டுசிவா என்ற நக்சலைட் கொல்லப்பட்டார்.
குண்டுக் காயம் அடைந்த பாலன் என்பவர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 20நக்சட்ைடுகளும் சேலம் சிறையிலும் 5 பெண் தீவிரவாதிகளும் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கருணாநிதி கருத்து:
இதற்கிடையே இந்தக் கைதுகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் கருத்துக் கேட்டபோது, காஷ்மீரில் பொடா சட்டம்அமலில் இல்லாததால் தான் தீவிரவாதம் வளர்ந்துவிட்டதாகக் கூறுகின்றனர் சிலர் (பா.ஜ.கவினர்). ஆனால், தமிழகத்தில் பொடாசட்டம் அமலில் இருந்தும் தீவிரவாதம் வளர்ந்தது ஏன் என்று கேட்டார்.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications