தப்பிய நக்சலைட்டுகளை தேட 4 தனிப் படைகள் அமைப்பு
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப் பகுதியில் மறைந்துள்ள 6 நக்சலைட்டுகளைத் தேடும் பணியில் 4 தனிப் போலீஸ் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் நடத்திய வேட்டையில் தீவிரவாதிகளின் தலைவனான பார்த்திபன் என்ற சிவாவைப் போலீசார்சுட்டுக் கொன்றனர். மேலும் நான்கு பெண்கள் உள்ளிட்ட 23 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் முக்கிய ரயில், விமான, பஸ் நிலையங்களை குண்டு வைத்துத் தகர்க்க அவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தது பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் போதுதெரிய வந்தது.
பெரும்பாலும் தெலுங்கில் எழுதப்பட்ட ஆவணங்கள் மற்றும் வரைபடங்களைத் தான் அந்தத் தீவிரவாதிகள் வைத்திருந்தனர். அவற்றைக் கைப்பற்றியபோலீசார் அவர்களைத் தொடர்ந்து "கவனித்து" வருகின்றனர்.
இந்தத் தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
தருமபுரி மாவட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவதால் ஏராளமான இளைஞர்கள் இந்தத் தீவிரவாதக் கும்பலிடம் எளிதாகச்சிக்கி விடுகின்றனர். ஆந்திராவில் செயல்படும் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகளிடம் தான் இவர்கள் பயிற்சி பெற்றதாகத்தெரிகிறது.
இந்நிலையில் தப்பியோடிய ஒரு பெண் உள்ளிட்ட ஆறு தீவிரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அவர்களைத் தேட 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே பிடிபட்ட 23 தீவிரவாதிகளும் அரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications