கோவில்களில் கடும் போலீஸ் பாதுகாப்பு .. பூசாரிகளிடமும் சோதனை
சென்னை:
காஷ்மீரில் உள்ள ரகுநாத் கோவிலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தமிழககோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் ஜம்மூ நகரில் உள்ள ரகுநாத் கோவிலுக்குள் சமீபத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கு பயங்கரமானவெறித் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் தீவிரவாதிகள் புகுந்து விடலாம் என்ற அச்சம் காரணமாக அனைத்துமுக்கியமான கோவில்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கியக் கோவில்களில் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கோவிலுக்கு வருபவர்கள் சோதனை செய்யப்பட்ட பின்னரேகோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், வடபழனிமுருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி மலைக்கோட்டை கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் உள்ளிட்ட கோவில்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, காஞ்சிபுரம்காமாட்சியம்மன் கோவில், திருவண்ணாமலை உள்ளிட்ட பக்தர்கள் அதிகமாகக் கூடும் அனைத்துக்கோவில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.பூசாரிகளும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆங்காங்கே ரகசிய சர்க்யூட் கேமராக்கள் மூலமாகவும் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகள் நுழைந்தால் தாக்குதல் நடத்துவதற்காக அனைத்துக் கோவில்களிலும் ஆயுதமேந்திய போலீசாரும்அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர ரகசிய போலீசாரும் சாதாரண உடையில் பக்தர்களோடு பக்தர்களாகக் கலந்து கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரி தீவிரவாதிகள் பயம் தவிர நக்சலைட்டுகள் பயமும் தமிழக போலீசாரை ஆட்டிப் படைத்து வருகிறது.
தருமபுரி அருகே உள்ள காட்டுப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் 25 நக்சலைட்டுகள் பிடிபட்டுள்ளனர்.இவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கியமான இடங்களைத் தகர்க்க சதி செய்தது அம்பலமாகியுள்ளது. இதில்கோவில்களும் அடங்கிய இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications