விழுப்புரத்தில் அதிமுகவுக்கு எதிராக பந்த்: கடைகள் மூடல்
விழுப்புரம்:
விழுப்புரத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுக்கும் அதிமுகவினரைக் கண்டித்து பந்த் நடந்து வருகிறது.இதனால் நகர் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் நகராட்சியின் தலைவராக உள்ள நூர் முகம்மது திமுகவைச் சேர்ந்தவர். துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்தஎஸ்.எஸ். பன்னீர்செல்வம் பதவி வகித்து வருகிறார்.
நகராட்சியின் தலைமைப் பதவி திமுக வசம் இருப்பதால் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக எந்தத் தீர்மானத்தையும்நிறைவேற்றவிடாமல் தடுத்து வருகிறார் பன்னீர். நகரின் மேம்பாடுப் பணிகள் தொடர்பாக எதாவது விவாதம் நடத்தப்பட்டால்பன்னீர் தலைமையில் அதிமுகவினர் நகராட்சிக்குளளேயே கலாட்டா செய்வது வழக்கமாகிவிட்டது.
இதனால் நகராட்சியே ஸ்தம்பித்துப் போயுள்ளது. எந்தப் பணிகளையும் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
இப்படியே இருந்தால் அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வ நேரிடும் என்பதால் சமீபத்தில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்குத்தாவினர். இவர்களது ஆதரவுடன் சமீபத்தில் பல்வேறு நகர வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிராக அதிமுகவினர் கலாட்டாவில் இறங்கியதால் அந்தப் பணிகளை செயல்படுத்த முடியவில்லை.
அதிமுகவினரின் தொல்லை அளவு கடந்துவிட்டதையடுத்து திமுக தலைமையில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றுதிரண்டுள்ளன.
இந்த அனைத்துக் கட்சிகளும் இன்று விழுப்புரம் நகரில் பந்த் நடத்த அழைப்பு விடுத்தன. அதிமுகவுக்கு எதிராக நடத்தப்படும்இந்த பந்த் காரணமாக விழுப்புரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வழக்கம்போல் நடந்தாலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. முக்கிய பஜார்கள் காலியாகக்கிடக்கின்றன. நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடிப் போயுள்ளன.
திமுகவினரே எதிர்பார்க்காத அளவுக்கு பந்துக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் வெறுத்துப் போயுள்ள அதிமுகவினர்வன்முறையில் இறங்கலாம் என்ற அச்சமும் பரவியுள்ளது. இதையடுத்து விழுப்புரத்தில் போலீஸ் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் போலீசார் குவிக்க்கப்பட்டுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications