இந்திய- ரஷ்ய தயாரிப்பான பிரம்மாஸ் ஏவுகணை ரெடி
கோயம்புத்தூர்:
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்து வரும் பிரம்மாஸ் அதி நவீன ஏவுகணை 2 ஆண்டுகளில் ராணுவத்தில்சேர்க்கப்பட்டுவிடும் என பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, இந்திய நதியான பிரம்மபுத்திராவை இணைத்து இந்த ஏவுகணைக்கு பிரம்மாஸ் என்றுபெயரிடப்பட்டுள்ளது. இரு நாடுகளும் இணைந்தே இந்த ஏவுகணைத் தயாரிப்புக்கான நிறுவனத்தையும் அமைத்துள்ளன.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் இந்திய பாதுகாப்புத்துறையின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவருமான டாக்டர் சிவதாணுபிள்ளை கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று உரையாற்றினார்.
ஜனாதிபதி அப்துல் கலாமுடன் இணைந்து பல்வேறு ஆயுத தயாரிப்புகளில் ஈடுபட்டவரான பிள்ளை பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:
இந்த அதி வேக ஏவுகணை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதையடுத்து இதன் தயாரிப்புப்பணிகள் 2 ஆண்டுகளில் தொடங்கும். இந்த ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
அதே போல 36,000 கி.மீ. உயரத்தில் செயற்கைக் கோள்களை செலுத்தும் திறன் மிக்க அதிக சக்தி கொண்ட ராக்கெட்டுகளைத்தயாரிக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த ராக்கெட்டுக்குத் தேவையான கிரையோஜெனிக் என்ஜின்களைஇஸ்ரோ ஏற்கனவே தயாரித்துவிட்டது.
எதிர்காலத்தில் Micro Electro Mechanical Systems (MEMS) தொழில்நுட்பம் தான் உலகையே ஆளப் போகிறது. விண்வெளிஆராய்ச்சியில் ஆரம்பித்து, மருத்துவத் தொழில்நுப்டம் வரை இந்தத் தொழில்நுட்பம் தான் நீக்கமற நிறையப் போகிறது.
கான்பூரில் உள்ள இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சிப் பிரிவு உலகத் தரம் வாய்ந்த மிகச் சிறிய கார்பன் டியூப்களைத்தயாரித்துள்ளது. இரும்பைவிட 100 மடங்கு அதிக வலு கொண்ட இந்த டியூப்கள் இரும்பை விட 60 மடங்கு எடை குறைந்தவை.இந்தியாவில் திறமைக்கு குறைவேயில்லை என்றாார் பிள்ளை.
-->
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications