தர்மபுரியில் பள்ளி மாணவிகள் கடத்தல்: ஒரு மாணவி- மாணவன் தப்பினர்
தர்மபுரி:
தர்மபுரியில் தன்னைக் கடத்த முயன்ற கும்பலிடம் இருந்து பள்ளி மாணவி சாதுர்யமாக தப்பி விட்டாள். மேலும் ஒருமாணவனையும் கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பாற்றிவிட்டாள். ஆனால், மேலும் 2 பள்ளி மாணவிகள்கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இன்று காலை தர்மபுரி பேருந்து நிலையத்தின் அருகே பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்த 6ம் வகுப்பு மாணவியின் அருகே வேன்வந்து நின்றது. அதில் உள்ளே இருந்த கும்பல் அந்த மாணவியை பிடித்து வேனுக்குள் இழுத்தது.
ஆனால், அவர்களின் கையைக் கடித்துவிட்டு அந்த மாணவி ஓடி வந்துவிட்டாள். அவளை சமாளிக்க முடியாமல் வேனில் இருந்தகும்பல் தடுமாறியபோது அதில் இருந்த ஒரு மாணவனும் தப்பி வெளியே வந்துவிட்டான்.
இருவரும் சேர்ந்து ஓடியதையடுத்து அந்த வேன் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டது.
வேனுக்குள் மேலும் 2 மாணவிகள் இருந்ததாக தப்பி வந்த மாணவியும் மாணவனும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அந்த வேன் ஊத்தங்கரை நோக்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஊத்தங்கரை பகுதியில் தான் கடந்த 4 நாட்களாகநக்சலைட்டுகளை போலீசார் வலை வீசிப் பிடித்து வருகின்றனர்.
இந் நிலையில் இந்த மாணவிகள் கடத்தலில் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கடத்தல் விவகாரத்தால் தர்மபுரியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. கடத்தப்பட்ட குழந்தைகள் யார் என்று தெரியதததால்பயந்து போன ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று அவர்கள் பாதுகாப்பாகஉள்ளார்களா என்று பார்த்து வருகின்றனர். பலர் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நிறைந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications