இன்று மாலை ரூபவாகினியில் பிரபாகரன் பேச்சு
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரையை இன்று இலங்கை அரசுத் தொலைக்காட்சியான ரூபவாகினி நேரடிஒளிபரப்பு செய்கிறது.
இது தவிர கனடாவில் இயங்கி வரும் தமிழ் பிராட்ராஸ்டிங் கார்போரேசன் உள்பட பல நாடுகளில் இயங்கி வரும் தமிழ்சேனல்களும், தமிழ் ரேடியோக்களும் இந்த உரையை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
மாவீரர் தினத்தையொட்டி அவர் ஒவ்வொரு ஆண்டு உரையாற்றுவது வழக்கம். அதை புலிகளின் வாய்ஸ் ஆப் ரேடியோ மட்டும்ஒலிபரப்பி வந்தது. ஆனால், இம்முறை அவரது உரையை ஒளிபரப்புமாறு ரூபவாகினிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேஉத்தரவிட்டுள்ளார்.
மேலும் அதை ஒளிபரப்ப வரும் தனியார் தொலைக்காட்சிகளையும் அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மாலை 5.15 மணிக்கு இந்த உரையை ரூபவாகினி ஒளிபரப்பலாம் என்று தெரிகிறது.
சமீபத்தில் தான் பிரபாகரனுக்கு 200 வருட சிறை தண்டனை வழங்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில் அரசேஅவரது உரையையும் ஒளிபரப்ப முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரிகா வரவேற்பு:
இந் நிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த நிதியுதவி செய்யும் நாடுகளின் மாநாடு வெற்றி பெற்றுள்ளதாக இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
நிதியுதவி செய்யும் அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் தீவிரவாதத்தைக் கைவிட வேண்டும் என்றும் அமெரிக்கா கோரிக்கைவைத்ததை சந்திரிகா சுட்டிக் காட்டியுள்ளார்.
சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் ஹரீம் பெரிஸ் நிருபர்களிடம் கூறுகையில், மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும்முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற ஓஸ்லோ தீர்மானம் அதிபர் சந்திரிகாவின் கவலைகளை அந்த நாடுகள் புரிந்துகொண்டுவிட்டதையே காட்டுகிறது என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications