நாளை வைகோவை சந்திப்பேன்: வெங்கையா நாயுடு
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நாளை சந்திக்கவிருப்பதாகபா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு இன்று கூறினார்.
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு 125 நாட்களுக்கு மேல் ஆகியும் கூட மத்திய கப்பல்போக்குவரத்துத் துறை அமைச்சர் திருநாவுக்கரசரைத் தவிர எந்த பா.ஜ.க. தலைவரும், பா.ஜ.க. அமைச்சரும்இதுவரை அவரைச் சந்திக்கவில்லை.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக அங்கம் வகித்தும் கூட பா.ஜ.க. தலைவர்கள் யாரும்வந்து வைகோவைப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம் மதிமுகவினரிடையே இருந்து வருகிறது.
வெங்கையா நாயுடுவும் வைகோவை சந்திக்கும் முடிவை தொடர்ந்து ஒத்திவைத்துக் கொண்டே இருந்தார். கடந்தசனிக்கிழமை கூட அவர் வைகோவைச் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் சந்திப்புநடைபெறவில்லை.
இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) வேலூர் சிறை சென்று வைகோவைச் சந்திப்பேன் என்று சென்னையில்இன்று கூறினார் வெங்கையா.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், கூட்டணிக் கட்சி நண்பர் என்ற முறையில்வைகோவை சந்திக்கப் போவதாகத் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மூலம் காட்பாடிக்கு வரும் வெங்கையா, கார் மூலம் வேலூருக்குச்சென்று வைகோவைச் சந்திக்கவுள்ளார் என்று வேலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பலராமன் வேலூர்நிருபர்களிடம் தெரிவித்தார். வைகோவைச் சந்தித்த பின்னர் மீண்டும் ரயில் மூலமே வெங்கையா சென்னைதிரும்புவார் என்றும் பலராமன் கூறினார்.
இம்முறையாவது அவர் உறுதியாக வைகோவை சந்திப்பாரா என்பது நாளை தான் தெரியும்.
-->
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications