கொளத்தூர் மணியின் 3 ஜாமீன் மனுக்கள் மீது நாளை விசாரணை
பெங்களூர்:
வீரப்பனால் தூதுவராகக் கோரப்பட்ட கொளத்தூர் மணியின் ஜாமீன் மனுக்கள் நாளை கர்நாடகத்தின் 3 நீதிமன்றங்களில்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
பெங்களூர் உயர் நீதிமன்றத்திலும், மைசூர் தடா நீதிமன்றத்திலும், சாம்ராஜ்நகர் நீதிமன்றத்திலும் இந்த மனுக்கள் நாளைவிசாரணைக்கு வருகின்றன.
போலீஸ் நிலையத்தை குண்டு வைத்து தகர்த்தது உள்பட கொளத்தூர் மணி மீது கர்நாடகத்தில் மொத்தம் 5 வழக்குகள்பதிவாகியுள்ளன. இதில் ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. மேலும் 3 வழக்குகளில் ஜாமீன் கோரி அவர் தாக்கல்செய்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகின்றன.
இத்தகவைல கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கெளடா தெரிவித்தார். மணியை விடுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளும்இறுதிக் கட்டத்தை அடைந்து வருவதாக அவர் நிருபர்களிடம் கூறினார்.
இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும்போது அதை கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் எதிர்க்க மாட்டார்கள் என்றுதெரிகிறது. கடந்தமுறை அவர் ஜாமீன் கேட்டபோது அதை அரசு வழக்கறிஞர்கள் எதிர்த்தனர். இதனால் ஜாமீன் கிடைக்கவில்லை.
இப்போது வீரப்பனிடம் அவரை தூதுவராக அனுப்ப கெடு நெருங்கி வருவதால் இம் முறை அவரது ஜாமீனை அரசு எதிர்க்காதுஎன்று தெரிகிறது.
இது குறித்து அமைச்சர் கெளடாவிடம் கேட்டபோது, இதில் நான் ஏதும் கூற முடியாது. அரசின் நிலையை நாளை நீதிமன்றங்களில்வழக்கறிஞர்கள் தெரிவிப்பார்கள் என்றார்.
ஜாமீனை எதிர்க்க மாட்டோம் என அமைச்சர் கூறினால் அதை வைத்தே யாராவது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துகொளத்தூர் மணியின் விடுதலையின் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் அமைச்சர் அமைதி காப்பதாகத் தெரிகிறது.
அப்துல் கரீம் விடுவாரா?
அதே நேரத்தில் கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக வீரப்பனால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் தந்தை மீண்டும் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வீரப்பனால் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட கர்நாடக போலீஸ் அதிகாரி ஷகீல் அகமத். இதையடுத்து வீரப்பனுடன்கர்நாடக அரசு பேச்சு நடத்த முயலும்போதெல்லாம் அதை எதிர்த்து வந்துள்ளார் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம்.இவரும் முன்னாள் போலீஸ் அதிகாரி தான்.
இப்போது வீரப்பனிடம் அனுப்புவதற்காக மணி மீதான வழக்குகளை வாபஸ் பெற அரசு முயற்சித்து வரும் நிலையில் அதைஎதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக கரீம் அறிவித்தார்.
இதையடுத்து அவரை சமாதானப்படுத்த நாகப்பாவின் குடும்பத்தினரும், நாகப்பாவின் சமூகத்தைச் சேர்ந்த மடாதிபதிகளும்அப்துல் கரீமை நேரில் சந்தித்தனர். நாகப்பாவின் உயிர் வீரப்பன் கையில் சிக்கியிருப்பதால் மணி மீதான வழக்களை வாபஸ்பெறுவதை எதிர்க்க வேண்டாம் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தனது முடிவை கரீம் மாற்றிக் கொண்டார். வழக்கு ஏதும் தொடர மாட்டேன் என்று உறுதியளித்தார். ஆனால், கரீம்மீண்டும் தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அவர் மீண்டும் முடிவு செய்திருப்பதாகத்தெரிகிறது. கரீம் ஏன் தனது நிலையை மாற்றிக் கொண்டார் என்று தெரியவில்லை. அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில்அரசு ஈடுபட்டுள்ளது. அவருக்கு நெருக்கமான முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் உதவியும் நாடப்பட்டுள்ளது.
வீரப்பன் கெடு நெருங்குகிறது:
இதற்கிடையே நாகப்பாவை விடுவிக்க கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப வேண்டும் என்று கோரி வீரப்பன் விதித்த 12 நாள்கெடு நெருங்கி வருகிறது. இந்த கெடு முடிய இன்னும் 4 நாட்கள் தான் பாக்கி உள்ளன.
வீரப்பனுக்கு பணம் தர மாட்டோம்:
நாகப்பாவை விடுவிக்க வீரப்பனுக்கு பணம் ஏதும் தரப்பட மாட்டாது என முன்னாள் டி.ஜி.பியும் கர்நாடக முதல்வரின்பாதுகாப்பு ஆலோசகருமான சீனிவாசுலு கூறினார். ராஜ்குமாரை மீட்கவும் பணம் ஏதும் தரப்படவில்லை என சீனிவாசுலுகூறினார். இந்த விஷயத்தில் தினகரின் குற்றச்சாட்டு பைத்தியக்காரத்தனமானது என்றார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications