சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகிறார் அசோக்குமார்
டெல்லி:
பல வழக்குகளில் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்தற்காக, ஜெயலலிதா அரசால் தொடர்ந்து ஒதுக்கப்பட்டுவந்த நீதிபதி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 9 புதிய நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிசீலனைசெய்துள்ள பட்டியலில் நீதிபதி அசோக்குமாரின் பெயரும் உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 42 நீதிபதி பதவிகள் உள்ளன. ஆனால் தற்போது 31 நீதிபதிகளே உள்ளனர்.
இதையடுதது 11 நீதிபதிகளின் பெயர்கள் கொண்ட ஒரு பட்டியலை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நான்கு நீதிபதிகள் குழு, அதிலிருந்து தற்போது ஒன்பதுநீதிபதிகளைத் தேர்வு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் எட்டு நீதிபதிகளும், சென்னையைச்சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விவரம்:
நீதிபதி ஆர். பானுமதி (சேலம்), நீதிபதி அசோக்குமார் (கிருஷ்ணகிரி), நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் (தொழில்தகராறு தீர்ப்பாயம், சென்னை), நீதிபதி டி.வி. மாசிலாமணி (மதுரை), நீதிபதி ஏ.ஆர். ராமலிங்கம் (முதன்மைசெசன்ஸ் நீதிமன்றம், சென்னை), நீதிபதி எஸ். சத்தார் சக்கரியா உசேன் (செங்கல்பட்டு), நீதிபதி எம். தணிகாசலம்(கோயம்புத்தூர்), நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலன் (சிறு வழக்குகள் நீதிமன்றம், சென்னை), வழக்கறிஞர் என்.கண்ணதாசன் (சென்னை உயர் நீதிமன்றம்).
இந்த ஒன்பது நீதிபதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றக் குழு அனுப்பிவைத்துள்ளது. ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஒப்புதல் கிடைத்தவுடன் இவர்களுடைய பதவி நியமனம்குறித்த அறிவிப்பு வெளிவரும்.
இவர்களில் நீதிபதி அசோக்குமார் தமிழக அரசுக்கு எதிராக பல கருத்துக்களைக் கூறி பெரும் பரபரப்புஏற்படுத்தியவர்.
சென்னை மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக இவர் இருந்த போது தான், மேம்பால ஊழல் வழக்குதொடர்பாக கடந்த ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி தமிழக அரசால் கைது செய்யப்பட்டார்.
கருணாநிதியைக் கைது செய்த முறையே தவறானது என்று தமிழக அரசைக் கடுமையாகக் குற்றம் சாட்டினார் நீதிபதிஅசோக்குமார்.
மேலும் தன்னிடம் வந்த பல வழக்குகள் தொடர்பான விசாரணையின் போதும் தமிழக அரசுக்கு எதிராகப் பலகருத்துக்களைக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் இவர்.
இதையடுத்து இவரை சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு தமிழக அரசு இடமாற்றம்செய்தது.
மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய நீதிபதிகளின் பெயர்ப் பட்டியலை அனுப்பியபோது, அதில் நீதிபதி அசோக்குமார் உள்ளிட்ட சில நீதிபதிகளின் பெயர்கள் இருப்பதற்கு தமிழக முதல்வர்ஜெயலலிதா கடும் ஆட்சேபணையும் தெரிவித்திருந்தார்.
ஆனால் உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் இந்த ஆட்சேபைணையைக் கண்டு கொள்ளாமல் நீதிபதிகளின் பெயர்ப்பட்டியலை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து விட்டது. அதிலிருந்து தான் தற்போது அசோக்குமார் உள்ளிட்டஒன்பது நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications