சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் 8 மாத குழந்தை
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனையில் ரத்த உறைவு காரணமாக கை அழுகியதால், அறுவைச் சிகிச்சை மூலம் கைஅகற்றப்பட்ட 8 மாத ஆண் குழந்தை தற்போது உயிருக்குப் போராடி வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் தொடர்ந்து அவதிப்படும் அவல நிலை நீடிக்கிறது.
கர்ப்பிணிப் பெண்ணும், சிறுமியும் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக பரிதாபமாகஇறந்தனர். இதைத் தொடர்ந்து ஒரு டாக்டரும், மூன்று நர்ஸ்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த துயரமே மறையாத நிலையில் 8 மாத ஆண் குழந்தையான ஹூசேன் வயிற்றுப் போக்கு காரணமாக சேலம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
ஆனால் டாக்டர்களின் அலட்சியம் காரணமாக அந்தக் குழந்தையின் வலது கையில் ரத்தம் உறைந்து, கைமுழுவதும் அழுகத் தொடங்கியது.
இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க வலது கையை வெட்டி எடுக்க வேண்டிய நிலைஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தையின் வலது கை ஆபரேஷன் மூலம் சமீபத்தில் அகற்றப்பட்டது.
இருப்பினும் ஆபத்து நீங்கவில்லை. குழந்தை தொடர்ந்து மயக்க நிலையிலையே இருப்பதால் அது உயிருக்குப்போராடி வருகிறது.
டாக்டர்களின் அலட்சியத்தால், கை துண்டிக்கப்பட்ட குழந்தையைப் பார்த்து அவனுடைய தாய் கதறிக் கதறி அழுதுகொண்டிருப்பதைப் பார்க்கும் போதே நமக்கும் நெஞ்சம் உறைந்து போகிறது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications