காவிரி ஆணைய கூட்டம்: நாளை டெல்லி செல்கிறார் ஜெ.
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகமுதல்வர் ஜெயலலிதா நாளை காலை டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
கடந்த 25ம் தேதி மத்திய நீர்வளத் துறை செயலாளர் ஏ.கே. கோஸ்வாமி தலைமையில் காவிரி கண்காணிப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்குக் காவிரியில் கர்நாடக அரசு 70 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் சம்பா சாகுபடிக்கான நீரைத் திறந்துவிட கர்நாடகஅரசு அப்போது மறுத்து விட்டது.
இதையடுத்து கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பானஅறிக்கையை பிரதமருக்கு கோஸ்வாமி அனுப்பி விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் வாஜ்பாய் தலைமையில் நாளை டெல்லியில் காவிரி நதி நீர் ஆணையம் கூடுகிறது.
இதில் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, பாண்டிச்சேரி முதல்வர் ரெங்கசாமி மற்றும் கேரள முதல்வர்ஆண்டனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சென்னையிலிருந்து நாளை காலை 10 மணிக்கு ஜெயலலிதா விமானம் மூலம் புறப்பட்டு டெல்லிக்குச் செல்கிறார்.கிருஷ்ணா இன்று மாலையே பெங்களூரிலிருந்து டெல்லி கிளம்புகிறார்.
-->


Click it and Unblock the Notifications
