"சோனியா ஒரு வெள்ளைக் காரி": சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளி
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் "சோனியா ஒரு வெள்ளைக் காரி" என்று அதிமுக கவுன்சிலரான வெற்றிவேல்கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் கூட்டம் இன்று வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. துணை மேயர் கராத்தேதியாகராஜன் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
தமாகாவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுகவிற்குத் தாவிய வெற்றிவேல் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, சோனியாவை வெளிநாட்டுக் காரர் என்றும் வெள்ளைக் காரி என்றும் கூறினார்.
இதையடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் இதற்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் பதிலுக்குக் கத்தத் தொடங்கவே சபையில் கடும் அமளி ஏற்பட்டது. ஒரேகூச்சலும் குழப்பமுமாக இருந்தது.
திமுக உறுப்பினரான ராயபுரம் மனோ எழுந்து, வெற்றிவேலின் பேச்சுக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்கவேண்டும் என்றார்.
இதை கராத்தே தியாகராஜன் ஏற்றுக் கொண்டு, வெற்றிவேலின் ஆட்சேபகரமான பேச்சுக்களை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டம் அமைதியாக நடந்தது.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications