வேலூர் சிறையில் வைகோ-வெங்கையா சந்திப்பு
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைபா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இவர்களுடைய சந்திப்பு இன்று தான் ஒரு வழியாக நடந்தது.வைகோவும் வெங்கையா நாயுடுவும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
வைகோவை சந்தித்து விட்டு வந்த வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசிய போது,
பொடா சட்டம் தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பா.ஜ.க. கருதுகிறது. மேலும்அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய்ந்திருப்பதையும் எங்கள் கட்சி விரும்பவில்லை.
காஷ்மீரிலும், வட-கிழக்குப் பகுதிகளிலும் அத்துமீறி நுழைந்து செயல்பட்டு வரும் தீவிரவாதிகளைஒடுக்குவதற்காகவே பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வைகோ வழக்குத் தொடர்ந்துள்ளார். எனவே இப்போது அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் நல்ல ஒன்று தான். இதை இந்தியா முழுவதிலும் அமல்படுத்துவது தொடர்பாகதேசிய அளவில் விவாதம் நடைபெற வேண்டும் என்றார் வெங்கையா நாயுடு.
-->
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications