தேர்வை நிறுத்த வெடிகுண்டு மிரட்டல்: மாணவன் கைது
திருமங்கலம்:
திருமங்கலத்தில் தேர்வைத் தள்ளிவைப்பதற்காக தான் படித்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகதொலைபேசி மிரட்டல் விடுத்த ப்ளஸ் டூ மாணவனைப் போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம் காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு நேற்று அதிகாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அங்குள்ள ஒரு பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலமணி நேரங்களில் அந்தப் பள்ளி வெடித்துச் சிதறி விடும் என்றும் தொலைபேசியில் பேசிய மர்ம நபர்தெரிவித்தான்.
இதையடுத்து பதற்றமடைந்த போலீசார் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் குறிப்பிட்ட அந்தப் பள்ளிக்குச்சென்று தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால் சல்லடை போட்டுத் தேடிய பிறகும் வெடிகுண்டு எதுவும் அங்கு சிக்கவில்லை. இதையடுத்து அந்ததொலைபேசி மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இதற்கிடையே தொலைபேசி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நேற்றேசம்பந்தப்பட்டவனைக் கைது செய்தனர்.
அவன் அதே பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வரும் சிவகுருநாதன் என்பது தெரிய வந்தது. நேற்று நடைபெற்றதேர்வை ஒத்திவைப்பதற்காகவே இந்த வெடிகுண்டுப் புரளியை அவன் கிளப்பியதும் தெரிய வந்தது.
சிவகுருநாதனைக் கைது செய்த போலீசார் இன்று காலை நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்தினர். பின்னர் அவன்சிறையில் அடைக்கப்பட்டான்.
-->
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications