தேனி: கிராம மக்களை பீதியில் ஆழ்த்திய யானை
தேனி:
தேனி அருகே கிராமத்திற்குள் புகுந்து மக்களை பீதிக்குள்ளாக்கிய யானையை வனக்காவலர்கள் பிடித்து டாப்ஸ்லிப் யானைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தேனி அருகே நடந்த கிராமத்துத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பழனியிலிருந்து இந்திரா என்ற யானைவரவழைக்கப்பட்டிருந்தது.
விழா முடிந்ததும் யானை மீண்டும் பழனிக்கு பயணித்தது. தேனி அருகே சிவலிங்கம்பட்டி என்ற கிராமத்திற்குஅருகே வந்தபோது, எதிரே வந்த எருமைக் கூட்டத்தைக் கண்டித்து யானை மிரண்டது.
இதையடுத்து பாகன்களிடமிருந்து விடுபட்டு தறி கெட்டு ஒடிய அந்த யானை பக்கத்தில் உள்ள கிராமத்திற்குள்புகுந்தது. யானையைப் பார்த்த கிராமத்து மக்கள் பயந்து ஒடினர். அங்கிருந்த வயல் வெளிக்குள் புகுந்து பயிர்களைநாசப்படுத்தியது அந்த யானை.
தகவல் அறிந்ததும் வனத் துறையினர் விரைந்து வந்து யானையை சிரமப்பட்டு பிடித்தனர். பின்னர் அதைப்பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது யானைக்கு மதம் பிடிக்கவில்லை என்றும், பயத்தில் தான் இவ்வாறு நடந்துகொண்டது என்றும் தெரிய வந்தது.
இதையடுத்து லாரியில் ஏற்றி டாப் ஸ்லிப் யானைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைத்தனர். யானையை அனுமதிஇல்லாமல் வளர்த்து வந்த பாகன்கள் ஆறுமுகம், குமரேசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications