நகைக் கடை கூரையை ஓட்டை போட்டு ரூ.25 லட்சம் தங்க நகைகள் கொள்ளை
சென்னை:
சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக் கடை ஒன்றில் ரூ.25 லட்சம் பெறுமானமுள்ள 5 கிலோ தங்க நகைகள்திருடப்பட்டுள்ளன.
எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள, அருகிலேயே காவல் நிலையம் உள்ள தி. நகர் உஸ்மான்சாலையில் இந்த திருட்டு நடந்திருப்பது போலீஸாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நகைக் கடைகள் நிறைந்துள்ள உஸ்மான் சாலையில் போத்திஸ் ஜவுளிக் கடைக்கு எதிர்புறம் உள்ள ஷாப்பிங்காம்ப்ளக்ஸில் ஆனந்த் ஜூவல்லரி என்ற நகைக் கடை உள்ளது. மூன்று அடுக்குக் கொண்ட வணிக வளாகத்தில்தரைத் தளத்தில் இந்தக் கடை உள்ளது.
நேற்று காலை கடைக்கு வந்த ஊழியர்கள் கடையைத் திறந்து உள்ளே பார்த்தபோது, அங்கு ஒரு நகையையும்காணவில்லை. அத்தோடு கடையின் மேல் கூரையில் இருந்த கூரையும் ஓட்டை போடப்பட்டிருந்தது.அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் வந்து பார்த்து ஆச்சரியமடைந்தனர். மிகவும் நுணுக்கமான முறையில் திருடர்கள் செயல்பட்டிருப்பதுதெரிய வந்தது. சப்தமே வராத கருவி மூலம் மேல் கூரையில் ஓட்டை போட்டுள்ள திருடர்கள் உள்ளே நுழைந்துஅத்தனை நகைகளையும் சுருட்டிக் கொண்டு தப்பியுள்ளனர்.
மேல் சுவரை அவர்கள் துளைத்தபோது அந்த சப்தம் அக்கம் பக்கத்தில் இருந்த வாட்ச்மேன்களுக்குக் கூடகேட்கவில்லை. அத்தனை நுணுக்கமான கருவியை அவர்கள் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
போலீஸ் மோப்ப நாய், நகைக்கடைக்கு பின்புறம் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் வரை சென்று திரும்பியது.எனவே கட்டட வேலைக்கு வரும் நபர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேககப்படுகிறார்கள்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார், இணை கமிஷனர் திரிபாதி, துணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications