காயிதே மில்லத் நினைவிடத்தை நானே திறப்பேன்: கருணாநிதி
சென்னை:
மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் காயிதே மில்லத்திற்கு திமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்ட நினைவிடத்தைவிரைவில் தானே திறந்து வைக்கப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் சார்பில் சென்னையில் ரம்ஜான் இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அதில் கருணாநிதி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
கண்ணியம் மிக்க காயிதே மில்லத் அவர்களுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் நினைவுச் சின்னம் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, பணிகளும் முடிவுற்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
தற்போது காயிதே மில்லத் நினைவாலயம் திறக்கப்படாமலேயே இருக்கிறது. சில தடைகள் காரணமாகநினைவாலயத்தைத் திறக்க முடியாமல் உள்ளது.
அந்தத் தடைகளை நீக்கிய பிறகு நானே எனது கையால் நினைவாலயத்தைத் திறந்து வைப்பேன்.
திமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்ட கோயம்பேடு பஸ் நிலையத்தை திறந்துவைக்க இந்த ஆட்சியாளர்களுக்கு மனம் இருக்கிறது.
ஆனால் எங்களால் கட்டி முடிக்கப்பட்ட காயிதே மில்லத் நினைவாலயத்தைத் திறந்து வைக்க முடியவில்லை.நினைவாலயம் கட்டி முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பது குறித்து முஸ்லீம் தலைவர்கள்எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது என்றார் கருணாநிதி.
சென்னை-அண்ணா சாலையில் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி வளாகத்திற்கு அருகே இந்த நினைவிடம்அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications