முன்னாள் நீதிபதியை அவமதித்த விவகாரம்: நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்
சென்னை:
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில்ஆஜரானார்.
செங்கல்வராயான் அறக்கட்டளையை நிர்வகிக்க உயர் நீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதி தங்கமணி தலைமையிலான 9 பேர்குழுவை பதவியேற்க விடாமல் பா.ம.கவினர் தடுத்தனர். இந்த அறக்கட்டளையை வன்னியர்கள் மட்டுமே நிர்வகிக்க வேண்டும்எனவும் பிற ஜாதியினரை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி தகராறு செய்தனர்.
முன்னாள் நீதிபதி என்றும் பாராமல் அவரை அவமதித்தனர்.
இந்த தகராறை பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியும், அக் கட்சியின் எம்.எல்.ஏவான காடு வெட்டி குருவும் தலைமையேற்றுநடத்தினர். இதனால் அந்த முன்னாள் நீதிபதியால் பதவியேற்க முடியவில்லை.
இதனால் கடும் கோபமடைந்த உயர் நீதிமன்றம் தகராறு செய்த அனைவரையும் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்தவிவகாரத்தில் ராமதாசுக்கும் வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே. நடராஜனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து மணியும், காடுவெட்டியும் தலைமறைவாகிவிட்டனர். மணி மட்டும் கடந்த 25ம் தேதி போலீசாரிடம்ஆஜரானார். காடுவெட்டியைக் காணவில்லை. தொடர்ந்து தலைமறைவாகவே உள்ள அவரைப் பிடிக்க தனப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
மணி தவிர மேலும் 17 பா.ம.கவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் ராமதாஸ், ஏ.கே. நடராஜன் மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த இன்னொரு நிர்வாகியான மாதவன் ஆகியோர்இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது ராமதாசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
அப்போது, இந்த வழக்கில் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு ராமதாஸ் கோரிக்கைவிடுத்தார். ஆனால், அதை ஏற்க நீதிபதிகள் ஜெகதீசன், தினகர் ஆகியோர் மறுத்துவிட்டனர்.
இந்த வழக்கை அவர்கள் ஒரு மாதத்துக்கு தள்ளி வைத்தனர். இதனால் ராமதாஸ் மீண்டும் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகிஆக வேண்டும்.
மணியுடன் ஸ்டாலின் சந்திப்பு:
இதற்கிடையே சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணியை திமுகஇளைஞரணித் தலைவர் மு.க. ஸ்டாலினும், சட்டமன்ற திமுக துணைத் தவைவர் துரைமுருகனும் சந்தித்துப் பேசினர்.
அவர்களுடன் வட சென்னை மாவட்ட திமுக தலைவர் பலராமனும் சிறைக்குச் சென்றார்.
முன்பு சிறையில் இருந்த திமுக தலைவர் கருணாநிதியை அப்போது அதிமுக கூட்டணியில் இருந்த ராமதாஸ் சந்தித்துப் பேசினார்என்பது நினைவுகூறத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications