For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தை கை துண்டிப்பு: சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ஆய்வு

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் அரசு மருத்துவமனையில் வயிற்றுப் போக்கு காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின்போது ஏற்பட்டஅலர்ஜி காரணமாக வலது கை துண்டிக்கப்பட்ட சிறுவன் ஹூசேன் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் படும் அவதி சமீப காலமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் கர்ப்பிணிப் பெண்ணும், சிறுமியும் இறந்த சம்பவம் பெரும் பிரச்சினையை எழுப்பி, ஒருடாக்டர் மற்றும் 3 நர்ஸ்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் கசப்பு மறையாத நிலையில், வயிற்றுப் போக்கு காரணமாக ஹூசேன் என்ற சிறுவன் சேலம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

பிறந்து 8 மாதமே ஆன ஹூசேனுக்குக் கொடுக்கப்பட்ட மருந்து அவனது உடலில் அலர்ஜியை ஏற்படுத்தி, வலதுகையில் ரத்தம் கட்டிக் கொண்டது. இதையடுத்து கை நிறம் மாறி, அழுகத் தொடங்கியது. இதையடுத்து அவனுடையஉயிரைக் காப்பாற்றுவதற்காக வலது கை ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக மருத்துவர் குழு விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழு சேலம்மருத்துவமனையில் ஆய்வு நடத்தியது.

பின்னர் டாக்டர் சுப்ரமணியம் கூறுகையில், குழந்தை ஹூசேன் தற்போது நலமாக உள்ளான். அடுத்த 15நாட்களில் அவனை வீட்டுக்கு அனுப்பி விடுவோம். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றார்.

அழகான அந்த ஆண் குழந்தையின் வலது கை பறிபோன சோகத்தில் அதனுடைய பெற்றோர்கள் இன்னும்அழுதவாறே உள்ளது காண்போர் கண்களைக் குளமாக்குகிறது.

தினசரி பலரும் வந்து சிறுவன் ஹூசேனைப் பார்த்துச் செல்கின்றனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X