உச்ச நீதிமன்றத்தில் வைகோவை மத்திய அரசு எதிர்க்கும்: பா.ஜ.க. அறிவிப்பு
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று கூறினாலும் அக் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ற திட்டங்களையும் சட்டங்களையும்ஜெயலலிதா கொண்டு வந்த வண்ணம் உள்ளார். குறிப்பாக மதமாற்றத் தடை சட்டம் மூலம் பா.ஜ.க, வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ்,இந்து முன்னணி, பஜ்ரங் தள் தலைவர்களின் மனதைக் கவர்ந்துவிட்டது அதிமுக.
இதனால் அடுத்த தேர்தலில் பா.ஜ.க.- அதிமுக கூட்டணி வருவது உறுதியாகி வருகிறது.
ஆனால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும் அக் கட்சியின் மதவாதத்தை எதிர்த்து வருகிறது திமுக. சமீப காலமாக திமுக தலைவர்கருணாநிதிக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகளின் தமிழக தலைவர்களுக்கும் இடையே தொடர்ந்து அறிக்கைப் போர் நடந்துவருகிறது.
காங்கிரஸ் கட்சியை நோக்கி திமுக நகன்றுவிடும் என்று தெரிகிறது.
அதிமுகவுடன் பா.ஜ.க. நெருங்கி வருவதாக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசனும் கூறியுள்ளார்.
இந் நிலையில் வழக்கம்போல் அதிமுகவுடன் கூட்டணி வராது என வெங்கைய்யா நாயுடு இன்றும் மறுத்தார்.
சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுக எங்களுக்கு சில விஷயங்களில் ஆதரவு தருவது உண்மை. அதே போல அதிமுக கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டம்போன்றவற்றை பா.ஜ.க. ஆதரிப்பதும் உண்மை.
ஆனால், வேறு விஷயங்களில் எங்கள் இரு கட்சியினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு தேசியஅளவில் திமுகவுடன் மட்டுமே கூட்டணி உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.
அதிமுகவுடன் பா.ஜ.க. நெருங்குவதாக எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இல.கணேசன் சொன்ன கருத்து வேண்டுமென்றேபெரிதாக்கப்பட்டுவிட்டது.
அடுத்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது தேர்தல் நேரத்தில் தான் அறிவிக்கப்படும்.
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக தலைவர் வைகோ கைது செய்யப்பட்டது தவறு. அச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அந்தச் சட்டத்தின் 21வது பிரிவை எதிர்த்து (பேச்சுரிமைக்கு எதிரான பிரிவு) உச்ச நீதிமன்றத்தில் வைகோதாக்கல் செய்திருக்கும் வழக்கை எதிர்த்து மத்திய அரசு மனு செய்யும். 21வது பிரிவு சரியானதே என்பதை உச்ச நீதிமன்றத்திடம்எடுத்துச் சொல்வோம் என்றார் நாயுடு.
பொடா சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டுவிட்டு இப்போது அதன் ஒரு பிரிவை எதிர்த்து வைகோ வழக்கு போட்டுள்ளதைபா.ஜ.க. விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்து வரும் பா.ஜ.க.நீதிமன்றத்தில் வைகோவின் வாதத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடிவு செய்துவிட்டது.
-->












Click it and Unblock the Notifications