தமிழக காவல்துறையில் கருப்பு ஆடுகள்: டி.ஜி.பி. தகவல்
வேலூர்:
தமிழகத்தில் நக்சலைட்டுகள் இந்த அளவுக்கு வளரக் காரணம் போலீஸ்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் தான்காரணம் என டி.ஜி.பி. நெயில்வால் கூறினார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பது சில கிராமவாசிகளின்தகவல் மூலம் போலீசாருக்குத் தெரிந்தது. தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய தமிழகஉளவுப் பிரிவினர் இதில் முழுத் தோல்வி அடைந்துவிட்டனர்.
நக்சல்கள் குறித்து காவல் நிலையங்களில் சில கிராமவாசிகள் தகவல் கொடுத்தபோதும் அதை ஏட்டுகளும்இன்ஸ்பெக்டர்களும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
இதையடுத்து தர்மபுரி மாவட்ட க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு அந்க கிராமவாசிகள் தகவல் தந்தனர். இதன் பின்னர்தான் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு சுமார் 25 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த டி.ஜி.பி. நெயில்வால் தானே தர்மபுரிக்கு வந்தார், நக்சல்கள் தேடுதல்வேட்டையை நேரில் பார்வையிட்ட அவர் அம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளை ஒரு பிடி பிடித்தார்.
பின்னர் வேலூர் வந்த அவர் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், பிடிபட்டுள்ள நக்சலைட்டுகள் மீதுபொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
இந்த நக்சலைட்டுகளுக்கும், வீரப்பன் கும்பலுக்கும் தொடர்பு இல்லை. அவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டுள்ள நோட்டீஸ்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை தெலுங்கில் எழுதப்பட்டிருந்தன.
எனவே ஆந்திர மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள மக்கள் போர்க்குழு நக்சலைட்டுகளுக்கும் இவர்களுக்கும்தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. அதே நேரம் அல்-உம்மா கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு ஏதும்இருப்பதாகத் தெரியவில்லை.
தடை செய்யப்பட்டஇயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாலும், பயங்கர சதி வேலையில் ஈடுபட்டிருந்ததாலும்இவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். பிடிபட்டவர்கள் மீது கண்டிப்பாக பொடாசட்டம் பயன்படுத்தப்படும்.
காவல்துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளும் இந்த நக்சலைட்டுகள் இந்த அளவுக்கு வளர காரணமாகஇருந்துள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு களையப்படுவர்.
தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட் வேட்டை தொடர்ந்து நடைபெறும். தற்போது தலைமறைவாகியுள்ள 4 அல்லது 5நக்சலைட்டுகளைத் தேடிப் பிடிக்க 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேடுதல் வேட்டையின்போது பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாக வரும் செய்திகள் தவறானவை என்றார் டி.ஜி.பி.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications