தமிழக தலைமை செயலாளர் திடீர் மாற்றம்: லட்சுமி நியமனம்
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து வந்த சுகவனேஸ்வர் திடீரென மாற்றம் செய்யப்பட்டு டான்சிநிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பந்தாடப்பட்டுள்ளனர்.
புதிய தலைமை செயலாளரான லட்சுமி பிரானேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் முதல் பெண்தலைமைச் செயலாளர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
இதுவரை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகளுக்கான கூடுதல் செயலாளராக இருந்து வந்தார்லட்சுமி பிரானேஷ். திடீரென இவரை தலைமைச் செயலாளர் பதவியில் அமர்த்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சுகவனேஸ்வர் கிட்டத்தட்ட பதவி இறக்கம் செய்யப்பட்டு பிரச்சனைக்குரிய டான்சி நிறுவனத்தின் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.
டான்சி நிலத்தை ஜெயலலிதாவும் சசிகலாவும் அடிமாட்டு விலைக்கு வாங்கிய வழக்கில் இருவருக்கும் உச்சநீதிமன்றம் தண்டனை விதிக்கப்படும் என்று கருதப்பட்டு வரும் நிலையில் அந்தத் துறையின்தலைவராக்கப்பட்டுள்ளார் சுகவனேஸ்வர்.
இதுவரை லட்சுமி பிரானேஷ் வகித்து வந்த பதவி எஸ். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுகவனேஸ்வர் நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் அவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சி பதவிக்கு வந்த பின்னர் நியமிக்கப்படும் நான்காவது தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சியை இழந்தபோது முத்துசாமி தலைமைச் செயலாளராக இருந்தார். அவர் பதவிக் காலம் முடிந்து ஓய்வுபெற்ற பின்னர் மத்திய அரசில் நல்ல பதவியில் இருந்த சங்கரை அங்கிருந்து இழுத்து வந்து தலைமைச்செயலாளராக்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுடன் பிரச்சனை வந்ததையடுத்து சங்கர் தூக்கியடிக்கப்பட்டார். அவர் மீண்டும் மத்திய அரசிடம்தஞ்சமடைந்து திட்டக் கமிஷன் துணைத் தலைவரானார். இப்போது மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷ்னராகிஜெயலலிதாவை டென்சனாக்கி வருகிறார்.
சங்கரைத் தூக்கிவிட்டு நிதித்துறையின் உயர் அதிகாரியாக இருந்த சுகவனேஸ்வரை அவரது விருப்பத்தையும் மீறிதலைமைச் செயலாளராக்கினார். எதற்கும் வளைந்து கொடுக்காத மிக நியாயமான அதிகாரி என்ற பெயர் பெற்றசுகவனேஸ்வர் இந்தப் பதவியும் மிக நேர்மையாக இருந்தார்.
அதற்குப் பரிசாக இப்போது அவரை தூக்கி அடித்துள்ளது தமிழக அரசு.
புதிய தலைமைச் செயலாளராகியுள்ள லட்சுமி பிரனேஷ் 1967ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications