சட்டசபை முதன்மைச் செயலாளரும் திடீர் நீக்கம்
சென்னை:
தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் செயப்பட்ட கையோடு தமிழகசட்டசபையின் முதன்மைச் செயலாளர் ஜானகிராமனையும் அப் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
அவருக்குப் பதிலாக புதிய செயலாளராக ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1994ம் ஆண்டே ஜானகிராமன் ஓய்வு பெற்று விட்டார். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசுஅவருக்கு 97ம் ஆண்டு வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு தரவில்லை. இதனால் பதவிக் காலம் முடிந்தவுடன்விலகினார். இதையடுத்து செயலாளராக ராஜாராமன் நியமிக்கப்பட்டார்.
ஆனால், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டில் இருந்த ஜானகிராமனை கூட்டி வந்து மீண்டும் முதன்மைச்செயலாளர் என்ற பதவியை வழங்கியது. 5 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஜானகிராமன் இப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
இதனால் ராஜாராமனை ஓவர் லுக் செய்து ஜானகிராமன் செயல்பட்டு வந்தார். செயலாளர், சட்டசபை என்றஅந்தஸ்தில் இருந்த ராஜாராமனை தொடர்ந்து ஜானகிராமன் ஓரம் கட்டி வந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் ஜானகிராமன் இப் பதவியை ஏற்றார். 2006 வரை அவர் இப் பதவியில் இருந்திருக்கவேண்டும்.
ஆனால், ஜானகிராமனுக்கு ஒப்பந்த அடிப்படையில் பதவி கொடுத்ததை மத்திய தேர்தல் கமிஷன்அங்கீகரிக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த இரண்டு ராஜ்யசபா தேர்தல் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் ஆகியவற்றை நடத்த ஜானகிராமனுக்கு தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கவில்லை.
சட்டசபை செயலாரக இருந்து வந்த ராஜாராமன் தான் இந்த தேர்தல்களை நடத்தினார்.
இந் நிலையில் சமீப காலமாக ஜானகிராமனின் செயல்பாடுகள் ஜெயலலிதாவுக்கே எரிச்சலைக் கிளப்பின.நமீபியாவில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற கமிட்டி கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இதில் சட்டப்படி ராஜாராமன் தான் பங்கேற்றிருக்க வேண்டும். இதை மத்திய அரசு சுட்டிக் காட்டியதாகவும்தெரிகிறது.
இதனால் ஜானகிராமன் மீது அதிருப்தி அடைந்த ஜெயலலிதா அவரை மாற்றியுள்ளார்.
ஜானகிராமனுக்கு மாதந்தோறும் ரூ. 40,000 சம்பளம் மற்றும் பிற படிகள் வழங்கப்பட்டு வந்தன. அரசுக்கு நிதிநெருக்கடி உள்ள நிலையில் இந்தப் பதவியே தேவையானதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. எல்லாம் சேர்ந்துஇப்போது ஜானகிராமனின் பதவியை பறித்துள்ளது.
இதுவரை சட்டசபைச் செயலாளராக இருந்து வந்த ராஜாராமன் இப்போது புதிய முதன்மைச் செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார். ராஜாராமன் 1967ம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் சாதாரண இளநிலை உதவியாளராகப்பணியாற்றத் தொடங்கினார். தற்போது உயர் பதவிக்கு வந்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை இந்தப் பொறுப்பில் அவர் இருப்பார். நேற்று மாலையே அவர் தனதுபுதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications