சேரன் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது: கோவை ரயில் போக்குவரத்து பெரும் பாதிப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம்புரண்டது.
சென்னையில் நேற்றிரவு புறப்பட்ட இந்த ரயில் இன்று காலை கோயம்புத்தூர் ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது. அங்குபயணிகள் அனைவரையும் இறக்கிவிட்ட பின்னர் பணிமனைக்குச் செல்வதற்காக பின் பக்கமாக சென்றது.
அப்போது இந்த ரயிலின் கடைசி 4 பெட்டிகளும் தடம் புரண்டன. இதனால் இந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியே செல்ல வேண்டிய பல ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டன.
நீண்ட தூர ரயில்கள் கோவை ரயில் நிலையத்துக்கு வராமல் போத்தனூருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. அதே போலகோவையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் போத்தனூரில் இருந்து தாமதாமாகப் புறப்பட்டு வருகின்றன.
ரயில்வே அதிகாரிகளும், பொறியாளர்களும் உடனே அங்கு விரைந்து தடம் புரண்ட ரயிலை அங்கிருந்து அகற்றும் பணியில்ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் இன்று மாலை முடிவடையும்.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து போத்தனூர் செல்லும் பயணிகளுக்கு உதவ ரயில்வே நிர்வாகம் சில நடவடிக்களைஎடுத்துள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து மீட்டர் கேஜ் பாதையில் சில ரயில்கள் போத்தனூருக்கு இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் பெட்டிகளை தூக்க 15 போர்ட்டர்களை ரயில்வே நியமித்துள்ளது.
இச் சம்பவம் ஹைதராபாத்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா-பொகாரோ எக்ஸ்பிரஸ் ஆகியவைகோயம்புத்தூர் ரயில் நிலையத்துக்கு வராமல் சென்றன.
மேலும் பாலக்காடு செல்லும் எல்லா ரயில்களும் போத்தனூர் வழியாக திருப்பிவிடப்பட்டுவிட்டன.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications