ஆஞ்சநேய பக்தரின் கருவேல மர அருளாசி!
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே ஆஞ்சநேய பக்தர் ஒருவர் கருவேல மரங்களில் ஏறி நடனம் ஆடி பக்தர்களுக்கு அருள்கூறி வருகிறார். முள் காயம் ஏதுமின்றி அவர் பத்திரமாக இறங்கி வருவதை அந்தப் பகுதி மக்கள் வியப்புடன்பார்த்து வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே பழைய பேட்டை நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் ஒரு கூலித்தொழிலாளி. மேலும் அவர் தீவிரமான ஆஞ்சநேயர் பக்தர்.
அடிக்கடி இவருக்கு ஆஞ்சநேயர் அருள் வரும். அந்த சமயங்களில் கருவேல மரக் காட்டுக்குள் புகுந்து அங்குள்ளகருவேல முள் மரங்களில் ஏறி நடனம் ஆடுவார். அப்படியே ஒவ்வொரு மரமாக தாவித் தாவி ஏறுவார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு இப்படியே நடக்கும். பின்னர் கீழே இறங்கி வந்து பக்தர்களுக்க அருள் கூறுவார்.
முதலில் இவரைப் பார்த்து பயந்த பொதுமக்கள் அவரது "சக்தி"யை உணர்ந்து இப்போது அவரிடம் அருள் வாக்குகேட்கின்றனர்.
மரங்களை விட்டு பெருமாள் கீழே வந்த பிறகு அவருக்கு இளநீர், எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைப் பொதுமக்கள்தருகின்றனர்.
முட்கள் நிறைந்த கருவேல மரங்களில் தாவித் தாவி ஏறினாலும், ஒரு முள் கூட அவரது உடலில் படாமலும்,ரத்தக்காயம் இல்லாமலும் பெருமாள் அதிலிருந்து கீழே இறங்கி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும்வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications