கொளத்தூர் மணி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு: தூது அனுப்புவதில் தொடர்ந்து சிக்கல்
மைசூர்:
வீரப்பனுக்கு வெடிகுண்டுகள் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பெரியார் திராவிட இயக்கத் தலைவர்கொளத்தூர் மணியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு சாம்ராஜ்நகர் நீதிமன்றம்ஒத்திவைத்தது.
இதையடுத்து கொளத்தூர் மணியை காட்டுக்குள் தூதராக அனுப்புவதில் மீண்டும் மிகப் பெரிய சிக்கல்ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மேலும் கொளத்தூர்மணியை தூதராக அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் விதித்திருந்த கெடுவும் முடிவடைந்து விட்டது.
இதற்கிடையே நாகப்பாவை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என்று வானொலி மூலம் கர்நாடக அமைச்சர் ராஜுகவுடாவும், கொள்ளேகால் பகுதி ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னச்சி மகாதேவசாமியும் மாறி மாறிவீரப்பனுக்கு செய்திகளை அனுப்பினர்.
இந்நிலையில் வீரப்பனுக்கு கொளத்தூர் மணி ஆயுதங்கள் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின்விசாரணை இன்று சாம்ராஜ்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ஆனால் இந்த ஜாமீன் மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகநீதிபதி தேவராஜ் அறிவித்தார்.
இதனால் கொளத்தூர் மணியைக் காட்டுக்குள் தூது அனுப்புவதில் கர்நாடக அரசுக்குத் தொடர்ந்து சிக்கல்ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கொள்ளேகால் நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு மறுக்கப்பட்ட கொளத்தூர் மணியின் வேறு இரண்டுஜாமீன் மனுக்கள் மைசூர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் என்று அவருடைய வழக்கறிஞர் பிரகாஷ்கூறினார்.
இந்நிலையில் அனைத்து வழக்குகளிலும் கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைத்த பிறகே, அவர் தூது செல்லத்தயாராக இருக்கிறாரா என்பது குறித்து அவரிடம் பேச்சு நடத்துவோம் என்று கர்நாடக சட்ட அமைச்சர்சந்திரேகவுடா தெரிவித்தார்.
மேலும் கொளத்தூர் மணிக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில், அவரைக் கைதுசெய்வதற்காக தமிழக போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளதாக வரும் செய்திகளையும் சந்திரேகவுடா மறுத்தார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications