பொன்முடியின் ஹீரோ ஹோண்டா ஷோ-ரூமில் போலீஸார் சோதனை
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ஆட்டோமொபைல் ஷோரூமில் லஞ்ச ஒழிப்புப்போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
சில மாதங்களுக்கு முன்பு தான் பொன்முடியின் விழுப்புரம் வீடு, சென்னை வீடு, பாண்டிச்சேரி வீடு, கடைகள்,பெட்ரோல் பங்குகள், ஹீரோ ஹோண்டா ஷோ ரூம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள்நடந்தன.
அப்போதே பொன்முடிக்கு கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாகவும் பெங்களூரிலும் அவரது சொத்துக்கள்இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் சமீபத்தில் அன்பழகன், ஐ.பெரியசாமி, கே.என். நேரு ஆகிய திமுக தலைவர்களின் வீடுகளில்ரெய்ட் நடந்தது.
இப்போது மீண்டும் பொன்முடியின் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலூர் அருகேஉள்ள சேலங்குப்பத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான ஹீரோ ஹோண்டா ஷோ ரூமில் நேற்றும் போலீசார் திடீர்சோதனையில் இறங்கினர்.
கடையின் அளவு, அதன் மதிப்பு, வாகனங்களின் மதிப்பு, மொத்த முதலீடு, இதன் பார்ட்னர்கள் குறித்தவிவரங்களை விசாரித்தனர்.
இதுகுறித்து பொன்டி கூறுகையில், இந்தச் சோதனைகள் அரசியல் உள் நோக்கம் கொண்டவை. விழுப்புரத்தில்சமீபத்தில் நகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர் ஆகியோரின் பாரபட்சமான நடவடிக்கையைக் கண்டித்து திமுகசார்பில் ஒரு நாள் பந்த் நடத்தினோம். அது மிகவும் வெற்றிகரமாக நடந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா இந்த போலீசாரை அனுப்பி என்னையும் திமுகவினரையும் மிரட்டமுயல்கிறார். இதெல்லாம் எங்களுக்கு தூசு என்றார்.
-->
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications