மாணவனை அடித்து ரத்தக் காயம் ஏற்படுத்திய ஆசிரியை
சென்னை:
டெஸ்ட் பேப்பரை திருத்தும்போது சக மாணவனுக்கு கூடுதலாக மார்க் போட்டதால், 11 வயது மாணவன் அவனதுஆசிரியையால் கடுமையாக தாக்கப்பட்டான். இதில் அவனது முகம் கிழிந்து ரத்தம் வழிந்தது.
அடையாறு சி.எல்.ஆர்.ஐ. வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும்மாணவன் சுரப். வகுப்பில் நடந்த தேர்வுத் தாளை மாணவர்களிடம் மாற்றிக் கொடுத்து மார்க் போடுமாறு வகுப்புஆசிரியை பணித்துள்ளார்.
அப்போது மாணவன் சுரப்பிடம், அவனது நண்பன் வெங்கடேஷின் விடைத்தாள் வந்துள்ளது. வெங்கடேஷ்சுமாராக படிப்பவன் என்பதால், அவனுக்கு கூடுதல் மார்க் போட்டு காப்பாற்றுமாறு, இன்னொரு நண்பனானபர்வேஸ் யோசனை கூறியுள்ளான்.
இதையடுத்து வெங்கடேஷுக்கு கூடுதல் மார்க் போட்டுள்ளான் சுரப். இதை அறிந்த ஆசிரியை 3மாணவர்களையும் அழைத்து தடியால் சரமாரியாக அடித்துள்ளார்.
இதில் சுரப் படுகாயமடைந்தான்.
அவனது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவனை பள்ளி வேனில், வீட்டுக்குஅழைத்துச் சென்று விட்டுள்ளனர். பள்ளிக்குச் சென்ற குழந்தை ரத்தக் காயத்துடன் வந்து நிற்பதைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்த அவனது வீட்டினர் உடனே அவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைஅளித்தனர்.
பின்னர் பள்ளிக்கு வந்து தாக்குதல் நடத்திய ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால்போலீசில் புகார் கொடுப்போம் என்று பெற்றோர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நடந்த சம்பவத்து சுரப்பின் பெற்றோரிடம் முதல்வர் ரங்கஸ் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாகவிசாரணை நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-->












Click it and Unblock the Notifications