மாரியம்மன் கோவிலுக்கு தீவைப்பு: பாண்டிச்சேரியில் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் கருமாரியம்மன் கோவில் மேற்கூரைக்கு சிலர் தீவைத்ததையடுத்துஅங்கு பெரும் பதற்றம் எழுந்துள்ளது.

கோவிலின் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தான் இந்த தீ வைப்பு சம்பவம் நடந்ததாகவும் இதில்மதரீதியில் எந்த நோக்கமும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

ரெட்டியார்பாளையம் பகுதியில் ஜெயநகர் நேற்று இடத்தில் இக் கோவில் உள்ளது. கோவிலின் மேற்கூரைக்குஇன்று சிலர் தீ வைத்துவிட்டு ஓடினர். இதில் அக் கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது.

இதையடுத்து இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவில் மேற்கூரைக்குவேறு மதத்தினர் தான் தீ வைத்துவிட்டதாக அவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களைஅங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

போலீசார் விசாரணை நடத்தியபோது கோவிலை நிர்வகிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டபிரச்சனையில் தான் தீ வைப்பக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் கோவிலுக்குத் தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+