பஸ்கள் தனியார்மயத்தில் ஊழல் நடக்கலாம்: காங். எச்சரிக்கை
கோவை:
சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்த ஜெயலலிதாவுடன் இனி காங்கிரஸ் எப்போதும் கூட்டணிஅமைக்காது என அக் கட்சியின் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைமையில் 3-வது அணி அமைக்க வேண்டும்என்று கூறி வருகிறார்கள். அப்படி அமைந்தால் அது 3-வது அணியாக இருக்காது. முதல் அணியாக,முதன்மையான அணியாக விளங்கும். பத்தோடு பதினொன்றாக நாங்கள் இனியும் இருக்க மாட்டோம்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ்கட்சி போட்டியிடும். அதிமுகவுடன் இந்தத் தேர்தலில் கூட்டணி வைக்க மாட்டோம். எந்தக் காரணம் கொண்டும்அதிமுகவுடனும், ஜெயலலிதாவுடனும் காங்கிரஸ் கட்சி இனி மேல் கூட்டணி வைத்துக் கொள்ளாது.
புது வீராணம் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இன்னும் பல புகார்கள் கூடவரலாம். ஜெயலலிதா அரசு என்றாலே ஊழல் தானே. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை விட்டு விட்டுதெலுங்கு கங்கைத் திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்தால் சென்னை நகர மக்களின் தாகம் தீர வழி கிடைக்கும்.
மக்கள் விரோத செயல்களைக் கடைப்பிடிக்கும் அரசாக அதிமுக அரசு மாறி விட்டது. பஸ்களை தனியார்களிடம்ஒப்படைத்தால் அதன் மூலம் 40,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.
நஷ்டத்தில் இயங்கும் வழித்தடங்களை தனியார் தருவது என்பது வேறு. ஆனால், லாபத்தில் இயங்குவதை ஏன்தனியாரிடம் தர வேண்டும். இதில் நடக்க உள்ள ஊழல் முறைகேடுகள் என்னென்னவோ தெரியாது என்றார்.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications