மதமாற்ற தடை சட்டத்துக்கு சங்கராச்சாரியார் தான் காரணம்: கிருஷ்ணசாமி
சென்னை:
மதமாற்றத் தடை சட்டத்துக்கு எதிராக நாளை சென்னையில் பேரணி நடக்க உள்ளது.
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடக்கும் இந்தப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர்திருமாவளவனும் பங்கேற்கிறார். அதே போல தென்னிந்திய கிருஸ்துவ சபை, கத்தோலிக்க கிருஸ்துவர் சங்கம், தமிழக முஸ்லீம்முன்னேற்றக் கழகம், தேசிய லீக் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இதில் பங்கேற்கின்றன.
சென்னை சின்னமலை ராஜிவ்காந்தி சிலையில் தொடங்கும் இந்தப் பேரணி அண்ணா சாலை வழியாக கிண்டி கவர்னர் மாளிகையைஅடையும். பின்னர் இவர்கள் கவர்னரிடம் மத மாற்றத் தடை சட்டத்துக்கு எதிராக மனுவும் அளிக்க உள்ளனர்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி,
தமிழகத்தில் மத மாற்றத் தடை சட்டமே தேவையில்லை. காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவிட்டார் என்பதற்காக அவரை திருப்திப்படுத்தவேஇந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எந்தவித தேவையும் அவசியமும் இல்லை. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது மாதிரி இப்போது நானும் மதம்மாறுகிறேன், பெயர் மாற்றுகிறேன் என்று பிரச்சினைகள் கிளம்பியுள்ளன.
சென்னையில் நடந்த தலித்களின் மத மாற்ற நிகழ்ச்சியில் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர். இந்த அரசு தாழ்த்தப்பட்டவர்களைஒடுக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.
ஆண்டாண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட தலித்களை மேலும் ஒடுக்கவே இச் சட்டத்தை சங்கராச்சாரியார் கொண்டு வரச் செய்தார் என்றார்கிருஷ்ணசாமி.
ஆர்.எஸ்.எஸ். மிரட்டுவதாக புகார்:
இதற்கிடையே தமிழகத்தில் சிறுபான்மை அமைப்பினரின் கல்வி நிலையங்களை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மிரட்டத் தொடங்கியுள்ளதாகமதமாற்றத் தடுப்புச் சட்ட எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் தேவசகாயம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, தலித்துகள், சிறுபான்மையினருக்குஎதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என்ற அச்சத்தை நாங்கள் வெளியிட்டோம். அது இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது.
பல கிறிஸ்தவப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. மாணவர்களை மதம் மாற்றம் செய்ய முயற்சி செய்வதாககூறி அவர்கள் மீது கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகிப்போம் என்று மிரட்டப்படுகிறார்கள் என்றார்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications