கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மரணம்: காட்டில் பிணமாக கிடந்தார்
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா காட்டுக்குள் பிணமாகக் கிடந்ததாக கர்நாடகபோலீசார் தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் காட்டுப் பகுதியில் தமிழக அதிரடிப் படை நடத்திய தாக்குதலில் வீரப்பனும், பிணைக் கைதியாக இருந்தநாகப்பாவும் சில அதிரடிப்படை வீரர்களும் குண்டுக்காயம் அடைந்திருப்பதாக முன்னதாக வந்த தகவல்கள் தெரிவித்தன.
அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் நாகப்பா காயமடைந்து விட்டதால் அவரை விடுவித்து விட்டதாக நேற்று நாகப்பாவின்குடும்பத்தினருக்கு அனுப்பியிருந்த கேசட்டில் வீரப்பனும் தெரிவித்திருந்தான்.
இதையடுத்து கர்நாடக போலீசார் காட்டுக்குள் சென்று நாகப்பாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை காட்டுக்குள் ஒரு இடத்தில் நாகப்பா கிடந்ததை கர்நாடக போலீசார் கண்டனர். அவசர அவசரமாகச்சென்று அவரை மீட்ட போது தான் நாகப்பா இறந்து போயிருப்பது தெரிய வந்தது.
ஆனால் நாகப்பா எவ்வாறு இறந்தார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. உண்மையிலேயே குண்டடி பட்டு தான் இறந்தாராஅல்லது அவர் இறப்புக்கு வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இதற்கிடையே நாகப்பா இறந்து போன தகவல் தெரிய ஆரம்பித்ததும் பெங்களூரில் கடும் பதற்றம் தோன்ற ஆரம்பித்தது. இந்தப்பதற்றம் நாளை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. கர்நாடத்தில் வாழும் தமிழர்களும் அச்சத்துடன் வீட்டுக்குள்ளேயேமுடங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications